Home
News

மொய் வச்சது போல.. Jio-வை விட ரூ.101 விலை கம்மி.. Vodafone கஸ்டமர்களே ஷாக் ஆகும்படியான 70 நாள் பிளான்!

வழக்கமாக ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் தான் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களை விட மலிவானதாக இருக்கும். இல்லையென்றால் முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த டெலிகாம் ஆப்ரேட்டர் நிர்ணயம் செய்யும் விலைகளை தான், மற்ற நிறுவனங்களும் அப்படியே "காப்பி" அடிக்கும். உதாரணத்திற்கு ஜியோ ரூ.299-ஐ கொண்டிருந்தால்.. ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய இரண்டுமே ரூ.299 மதிப்பிலான திட்டங்களை கொண்டிருக்கும். ஆனால் அவைகள் வழங்கும் சில வேறுபாடுகள் இருக்கும். ஆனால் வோடாபோன் ஐடியாவின் 70 நாள் திட்டமொன்று ஜியோவை விட ரூ.101 மலிவானதாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டமாகவும் இருக்கிறது. அதென்ன திட்டம்? அதன் விலை நிர்ணயம் என்ன? இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வோடாபோனை விட ரூ.101 விலை அதிகமாக இருக்கும் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

Jio-வை விட ரூ.101 விலை கம்மி.. Vodafone-ன் 70 நாள் பிளான்!

மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தாவை (Netflix Mobile Subscription) வழங்கும் வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டத்தின் (Vodafone Prepaid Plan) விலை ரூ.998 ஆகும். ஜியோவிடமும் கூட இதே போன்ற திட்டம் உள்ளது. ஆனால் அதன் விலை ரூ.1099 ஆகும். அதாவது வோடாபோனை விட ஜியோவின் திட்டம் ரூ.101 விலை அதிகமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.998-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதாவது 105ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இது நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவையும் வழங்கும். இந்த சந்தா ரூ.998-ன் வேலிடிட்டிகாலமான 70 நாட்கள் வரை கிடைக்கும். இதுதவிர்த்து அன்லிமிட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும்.

ஒருவேளை ரூ.998-ன் கீழ் கிடைக்கும் 105ஜிபி டேட்டா உங்களுக்கு போதுமானதாக இருக்காது என்றால், சற்றே அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டியை வழங்கும் ரூ.1399-ஐ ரீசார்ஜ் செய்யலாம். இது டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. சுவாரசியமாக இந்த திட்டத்திலும் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தா இலவசமாக கிடைக்கும்.

ஜியோவின் ரூ.1099 திட்டத்தின் கீழ் என்னெண்ணன் நன்மைகள் கிடைக்கும்? இந்தியாவிலேயே நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டமாக இருந்தாலும் கூட.. ஜியோவின் ரூ.1099-ஐ வோடாபோனின் ரூ.998 உடன் ஒப்பிட்டால்.. ஜியோ தான் வெற்றி அடையும். ஏனென்றால் ஜியோவின் ரூ.1099 திட்டமானது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் இது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.

அதாவது வோடாபோனின் ரூ.998-ஐ விட 14 நாட்கள் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் 63ஜிபி அளவிலான அதிக டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் வோடபோன் திட்டத்தை விட 14 நாட்களுக்கு கூடுதலாக நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை வழங்கும். எப்படி பார்த்தாலும் ரூ.101 என்கிற அதிக விலைக்கு.. மிகவும் அதிகமான நன்மைகளையே இது வழங்குகிறது.

இந்திய டெலிகாம் துறையில் நடந்த சமீபத்தைய அப்டேட்களை பொறுத்தவரை.. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை டெலிவரி (Home Delivery) செய்யும் புதிய வசதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் தற்போது வரையிலாக குருகிராம் அல்லது காஜியாபாத்தில் (Gurugram and Ghaziabad) இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

முன்னதாக பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்டு (Prepaid), போஸ்ட்பெய்ட் (Postpaid), ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) மற்றும் டிஜிட்டல் டிவி (Digital TV) வாடிக்கையாளர்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்களை (T20 Cricket Tournament plans) அறிமுகப்படுத்தியுள்ளது. டி20 தொகுப்பின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவுடன் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Vodafone Idea Plan is The Cheapest Netflix Basic Plan in India and Rs 101 Cheaper Than Jio
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X