Home
News

சூரியசக்தியில் இயங்கும் பொது வைஃபை-யை சொந்தமாக உருவாக்கிய சூப்பர் கிராமம்!

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமம் மான்கோசி. இக்கிராமத்தில் வெறும் 6,000 மக்களே வசிக்கும் நிலையில், அருகிலுள்ள நகரம் 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமம் மான்கோசி. இக்கிராமத்தில் வெறும் 6,000 மக்களே வசிக்கும் நிலையில், அருகிலுள்ள நகரம் 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நகரங்களில் நாம் பயன்படுத்தப்படும் எந்தவொரு வசதிகளும் இல்லாமல் தான் இந்த கிராம மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.

சூரியசக்தியில் இயங்கும் பொது வைஃபை-யை சொந்தமாக உருவாக்கிய கிராமம்!

ஆனால் அவர்களிடம் பொது வைஃபை வசதி உள்ளது. ஆச்சர்யமாக உள்ளதல்லவா!அவர்கள் எப்படி அதை நிர்வகிக்கின்றனர்?

 மான்கோசி

மான்கோசி

மான்கோசி ஆப்ரிக்காவில் உள்ள ஏழை கிராமங்களில் ஒன்றாகும். மேலும் இதுபோல பல கிராமங்கள் அங்கு உள்ளன. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் இணைப்புகள் இல்லை. அதற்கு பதிலாக மக்கள் பேட்டரி இயக்கப்படும் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். அவற்றையும், தங்கள் மொபைல் போன்களையும் உள்ளூர் கடைகளில் கட்டணம் செலுத்தி சார்ஜ் செய்துகொள்கின்றனர். அதற்கெல்லாம் மேலாக அந்நாட்டில் இணைய தரவிற்கான விலை அபத்தமானது உள்ளது. உணவு, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளுக்கு பதிலாக, மக்கள் தங்களது மாத வருமானத்தில் 22 சதவிகிதம் வரை இணைய கட்டணத்திற்கு செலவிடுகின்றனர். . இது அவசியமானது தான், ஆனால் மிகவும் வீண்செலவு.

வெஸ்டன் கேப்

வெஸ்டன் கேப்

இருப்பினும் மான்கோசி கிராமம் அதன் அதிர்ஷ்டத்தை எப்படியோ பயன்படுத்திக்கொண்டது. 2012 ல் இக்கிராமம் வெஸ்டன் கேப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவுடன் இணைந்தது. இதன் நோக்கம் நலிவடைந்த கிராமங்களின் தொலைதொடர்பு வசதிகளுக்கான மாடலை உருவாக்கும் பரிசோதனை முயற்சியாகும். இதன்மூலம் கிராமப்புற சமூகத்திற்கு மலிவானதாக அதேநேரம் நீடித்துநிலைக்கக்கூடிய தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கவேண்டும். இப்போது மான்கோசி கிராமம் இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை வெற்றிகரமாக நிரூபித்துவருகிறது.

ஜென்ஜீலீனி நெட்வொர்க்ஸ் ப்ராஜெக்ட்

ஜென்ஜீலீனி நெட்வொர்க்ஸ் ப்ராஜெக்ட்

ஜென்ஜீலீனி நெட்வொர்க்ஸ் ப்ராஜெக்ட் என்று அழைக்கப்படும் இது, உள்ளூர் மொழியான இஸிகோஸா -ல் " நீங்களாகவே செய்யுங்கள்" என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக ஒரு இணைய சேவை வழங்குநர் (ISP) எனினும், இது தென்னாப்பிரிக்காவில்ஒரு உள்ளூர் கூட்டுறவு மூலம் நடத்தப்படும் முதல் நிறுவனம் ஆகும். ஜென்ஜீலீனி நிறுவனம் இணைய இணைப்பிற்கு தேவையான கட்டமைப்புகளை நிறுவி பராமரிப்பதுடன், அதன் சொந்த குரல் அழைப்புகள் மற்றும் இணைய தரவு தொகுப்புகளை மக்களுக்கு விற்பனை செய்கிறது.

மலிவு விலையில்

மலிவு விலையில்

இது இலாபநோக்கமற்ற நிறுவனமாக இருப்பதால், இண்டர்நெட் சேவைகளை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் தருவதுடன், உள்ளூர் சமூகத்திற்கு கூடுதல் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

மக்களுக்கு உதவியதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளோம்

மக்களுக்கு உதவியதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளோம்

வெஸ்டர்ன் கேப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றுபவரும், ஜென்ஜீலீனி திட்டத்தை செயல்படுத்தியதில் ஒருவருமான பில் டக்கர், இதுகுறித்து சமூக வலைதளத்தில் கூறியதாவது " ஜென்ஜீலீனி நெட்வொர்க்கை நிறுவுவதற்கு நாங்கள் உள்ளூர் தலைவர்களை அணுகி, அங்குள்ள மக்களுக்கு உதவியதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளோம். இறுதியில் அந்த மக்கள் தாங்களாகவே இந்த திட்டத்தை இயக்குகின்றனர் "

30 சதுர கிலோமீட்டர்

30 சதுர கிலோமீட்டர்

இக்குழு தங்கள் நெட்வொர்க்குக்கான ஒரு அமைப்பை வடிவமைத்து, ஒரு டஜன் நெட்வொர்க் நிலையங்களை உருவாக்கியது. சூரியசக்தியால் இயங்கக்கூடிய இவையனைத்தும், மான்கோசி கிராமத்தின் வீடுகளின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வைஃபை ஸ்டேசன்கள் சுமார் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு சேவை வழங்கவல்லது. மேலம் அவர்கள் தேசிய ஐஎஸ்பி உரிம அமைப்பிடம் இருந்து கட்டணங்களில் விதிவிலக்கு பெற்றுள்ளதால், ஜென்ஜீலீனி நிறுவனத்தை இயக்குவதற்கான செலவினங்கள் குறைந்து, அதன் சேவைகளை மலிவான விலையில் வழங்குகின்றனர்.

20 முதல் 40 மடங்கு மலிவாக உள்ளன

20 முதல் 40 மடங்கு மலிவாக உள்ளன

கூடுதலாக மக்கள் நேரடியாக சூரிய சக்தி மின்நிலையங்களுக்கு சென்று, தங்கள் கைபேசியை குறைந்த கட்டணத்தில் சார்ஜ் செய்துகொள்ளலாம். தென்னாப்பிரிக்காவில் சாதாரண குரல் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு சுமார் ரூ7.10 (இந்திய மதிப்பில்) செலவாகிறது. இருப்பினும் ஜென்ஜீலீனி அதை நிமிடத்திற்கு ரூ 0.95 என்ற விலையில் வழங்குகிறது. தரவு கட்டணங்களும் இதேபோல் 20 முதல் 40 மடங்கு மலிவாக உள்ளன.

Best Mobiles in India

English summary
This Village Built Its Own Solar-Powered Public Wi-Fi For Internet Access In A 30 Km Area: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X