டாட்டூ ஒட்டி ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் பண்ணுங்க.!!

Written By:

அறிவியல் தொழில்நுட்பம் தினந்தோறும் புதிய வகை கண்டுபிடிப்புகளின் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. இன்று வெளியாகும் அல்லது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கண்டுபிடிப்புகள் நம் உடலில் இணைக்கப்படுவதைப் போன்றே இருக்கின்றது.

டாட்டூ ஒட்டி ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் பண்ணுங்க.!!

அந்த வரிசையில் நம் உடலில் ஒட்டிக் கொள்ளும் புதிய வகை டாட்டூ மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்து இதனை டெம்ப்பரரீ மெட்டாலிக் டாட்டூ என அழைக்கின்றனர்.

டாட்டூ ஒட்டி ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் பண்ணுங்க.!!

இந்த வகை டாட்டூக்கள் உடலின் தோளில் நேரடியாக இன்டர்ஃபேஸ் உருவாக்கி விடும் என மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த சின்-லியு கௌ தெரிவித்துள்ளார்.

டாட்டூ ஒட்டி ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் பண்ணுங்க.!!

டூயோஸ்கின் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெம்ப்பரரீ டாட்டூ போட்டோ ஃபிரேம் மற்றும் சாக்லெட் வகைகளில் அலங்கரிக்கப் பயன்படும் தங்க இலை பயன்படுத்தி எளிய வகை சர்க்யூட்களை உருவாக்குகின்றது.

டாட்டூ ஒட்டி ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் பண்ணுங்க.!!

இந்த புதிய தொழில்நுட்பம் எவரையும் தங்களுக்கு பிடித்தமான தங்க இலையிலான டெம்ப்பரரீ டாட்டூ உருவாக்கி பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த டாட்டூக்கள் இன்புட் டிவைஸ் போன்று மாறி தோலினை டிராக் பேட் போன்று மாற்றி பயனர்களை கணினி அல்லது ஸ்மார்ட்போன்களுடன் இணைத்து ஆப்ஸ்களை பயன்படுத்த வழி செய்யும்.

English summary
This Type of Tattoo can control your smartphone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot