சந்தேகப்பட்டது போலவே நடந்துருச்சு.. 5G பெயரை சொல்லி Jio வைக்கும் புதிய வேட்டு!
ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக பலன்களைத் தரும் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கட்டண உயர்வு
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவித்த பின்பு தான் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கலாம்.

அதாவது TRAI எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்கள், வருவாய் குறித்த சில அறிக்கையை வெளியிட்டது. இதில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் அதிகமானவருவாயைப் பெற்றுள்ளது.

வெளியான அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் 4279 கோடி வருவாயும், ஏர்டெல் நிறுவனம் 2179 கோடி வருவாயும் பெற்றுள்ளன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிக லாபத்தை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ ARPU 108 ரூபாய்
ஆனாலும் ARPU எனப்படும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் கிடைக்கும் வருவாயைப் பொறுத்தே இங்கு கட்டண உயர்வு தீர்மானிக்கப்படுகிறது.அந்தவகையில் ஜியோ ARPU 108 ரூபாய் எனவும், ஏர்டெல் ARPU 190 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜியோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் லாபம் அதிகமாக இருக்கிறது என்றாலும் கூட ஒருவாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் நல்ல இடத்தில் என்றே கூறலாம்.

ஏற்கனவே கூறியபடி ARPU வருவாயை வைத்து தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் குறைவாக இருப்பதால் விரைவில் இந்நிறுவனம் கட்டண உயர்வு கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை வந்துவிட்டது, ஆனாலும் 4ஜி கட்டணங்களை உயர்த்தினால் அது சரியாக இருக்காது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் எந்த விதமான கட்டண உயர்வு இல்லாமல், சந்தாதார்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி சேவை
மேலும் இப்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனர்கள் தனது 5ஜி சேவையை படிப்படியாக பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் சேவையை தொடங்கியுள்ளன. வரும் டிசம்பர் மாதம் இந்நிறுவனங்கள் அதிக நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications