Home
News

அந்த மூணு விஷயம்.. கூகுள் மேப்ஸ் வச்ச புது அப்டேட்.. டூர் போற ஆசை இருக்கா.. இதை தெரிஞ்சுக்கோங்க?

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஏகப்பட்ட புதிய பீச்சர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போது மூன்று புதிய பீச்சர்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. இந்த பீச்சர்களை டூர் செல்பவர்கள், ஹாலி டே செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி என்ன பீச்சர்கள் வந்துள்ளது? முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் முதலில் புதிய பீச்சர்களை கொண்டுவந்து, அவற்றுக்கான வரவேற்பை பார்த்துவிட்டு, அதன்பிறகு மற்ற நாடுகளில் அப்டேட் செய்து கொடுக்கும். இப்போது, வந்துள்ள பீச்சர்களும் அப்படி முதலில் அமெரிக்காவில் வருகின்றன. அடுத்த வாரம் மற்ற நாடுகளுக்கு கிடைக்க இருக்கிறது. முதலில் இன்சைடர் டிப்ஸ் (Insider Tips) பீச்சர் இருக்கிறது.

அந்த மூணு விஷயம்.. கூகுள் மேப்ஸ் வச்ச புது அப்டேட்.. டூர் போற ஆசை?

இன்சைடர் டிப்ஸ்

1. ஜெமினி சாட்பாட் உதவியுடன் இந்த இன்சைடர் டிப்ஸ் கிடைக்கிறது. அதாவது, டேட் செல்ல வேண்டுமானாலும் சரி, குரூப் ஆக்டிவிட்டிக்காக செல்ல வேண்டுமானாலும் சரி, எந்த ரெஸ்டாரன்ட் பக்காவாக இருக்கும் என்பதை இந்த இன்சைடர் டிப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் ரெஸ்டாரன்ட் மட்டும் கிடையாது.

2. ஹோட்டல், கான்சர்ட் போன்றவற்றுக்கு செல்லும்போதும் பயன்படுத்தலாம். கூகுள் மேப்பில் வழக்கம்போல ரெஸ்டாரன்ட், ஹோட்டல் போன்றவற்றை தேடி அதை கிளிக் செய்து ஸ்க்ரோல் டவுன் செய்து கொள்ளுங்கள். இப்போது, அது குறித்த டிப்ஸ்கள் கொடுக்கப்படும். இதற்கான ஜெமினி பல்வேறு வெப்சைட்களை அலசி ஆராய்ந்து தகவல்களை கொடுக்கும்.

3. டிரஸ் கோட் எப்படி, ரிசர்வேஷன் புக் செய்வது எப்படி, மெனுவில் என்னென்ன இருக்கும், பார்க்கிங் இருக்கிறதா, அப்படி இருந்தால் எப்படி செல்ல வேண்டும் போன்ற விவரங்களை கொடுக்கும். இது அமெரிக்காவில் இருக்கும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டும் இப்போதைக்கு கிடைக்கிறது. மற்ற நாடுகளில் அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

அப்டேட்டட் எக்ஸ்ப்ளோர் டேப்

1. ஏதாவது புதிய சிட்டிக்கு அல்லது டவுன்களுக்கு பயணம் செல்லும்போது, அந்த பகுதிகளை பற்றி தெரியாமல் இருக்கும் நேரத்தில் பிரபலமான ரெஸ்டாரன்ட்கள், சுற்றுலாத் தலங்கள் அல்லது முக்கியமான ஆக்டிவிட்டிகள் நடக்கும் இடங்களை இந்த எக்ஸ்ப்ளோர் டேப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது அந்த பகுதிகளை பற்றிய நம்பகத்தன்மையான விவரங்களை கொடுக்கும்.

2. ஏனென்றால், இது வயட்டர், லோன்லி பிளானட் மற்றும் ஓபன் டேபிள் போன்ற நம்பகமான தளங்களில் கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கிடைக்கிறது. அதேபோல உள்ளூர் இன்ப்ளூயன்சர்கள் கொடுக்கப்பட்ட விவரங்களும் இதில் கிடைக்கும். ஆகவே, உங்களுக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த மாதத்தில் உலகளவில் இது கொண்டுவரப்படுகிறது.

ஈவி சார்ஜர்கள்

1. அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் ஈவி சார்ஜர்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்தியாலும் ஈவி சார்ஜ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. ஆகவே, எலக்ட்ரிக் கார்களை வைத்திருக்கும் கூகுள் மேப்ஸ் யூசர்கள் டூர் அல்லது ஹாலிடே செல்லும்போது, எளிதாக ஈவி சார்ஜர்கள் இருக்கும் பகுதிகளை தெரிந்து கொள்ளலாம்.

2. அமெரிக்காவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் மற்றும் எலக்ட்ரிஃபை அமெரிக்கா ஆகிய சார்ஜ் ஸ்டேஷன்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுபோல உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. இந்த பீச்சர் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் கூகுள் பில்ட் கார்களில் அடுத்த வாரம் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, இந்தியாவிலும் இந்த பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. முன்னதாக நொய்டா சலுகைகளில் செல்லும் பைக், கார், வேன் போன்ற வாகனங்களுக்கு கூகுள் மேப்ஸ் மூலமாக ஸ்பீடு லிமிட் காண்பிக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் கிடைக்க இருக்கிறது. இப்போது, மேலும் 3 பீச்சர்களை கூகுள் நிறுவனம் கொண்டவந்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Three New Google Maps Features Help You Save Time Stay Ahead Holiday Season With Gemini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X