சாலை விபத்தை தடுக்கும் ஸ்மார்ட் செயற்கை நுண்ணறிவு கருவி-9-ஆம் வகுப்பு மாணவன் அசத்தல்.!
அதேசமயம் அவர் எழுதியுள்ள அல்காரிதம் வாகனத்தில் பொருத்தியுள்ள சாதனத்திற்கு ஏற்றவாறு எதிரிலுள்ள முகப்புவிளக்கின் நிலையை தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கார் விபத்துகளில் 1,50,000 பேர் கொல்லப்படுகின்றனர். இந்த ஒவ்வொரு விபத்தின் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவாக இல்லையெனினும், அவற்றில் பெரும்பாலானவை இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளன.மற்றும் அவற்றில் அதிகமான விபத்துக்கள் எதிரில் வரும் கார்களின் சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சம் ஓட்டுநர்களின் கண்களை மங்கலாக்கியதால் நிகழ்ந்துள்ளன.

பள்ளி மாணவரான ரிஷாங்க் கணபர்தி, பெங்களூரில் உள்ள நேசனல் பப்ளிக் பள்ளியில் 9 வது வகுப்பு படித்துவந்தாலும், ஏற்கனவே இதைப்பற்றி நன்கு புரிந்துவைத்துள்ளார் மற்றும் இதற்கு தீர்வுகாணும் வழியையும் அவர் கண்டறிந்துள்ளார். ஓட்டுநர்கள் இரவில் ஒருவருக்கொருவர் கண்களை மங்கலாக்கிக்கொண்டு செயல்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக செயல்படும் ஒரு தன்னியக்க அமைப்பு (Automated System) உருவாக்குவதே சிறந்த வழி என அவர் தீர்மானித்தார்.

'லைட் ஃசேப்'
இப்படித்தான் கணபர்தியால் தன்னந்தனியாக வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட 'லைட் ஃசேப்' சாதனம் உருவானது. இதிலுள்ள சென்சார்கள் எதிரில் வரவிருக்க வாகனத்தின் முகப்புவிளக்கை கண்டறியும். அதேசமயம் அவர் எழுதியுள்ள அல்காரிதம் வாகனத்தில் பொருத்தியுள்ள சாதனத்திற்கு ஏற்றவாறு எதிரிலுள்ள முகப்புவிளக்கின் நிலையை தீர்மானிக்கிறது.

ராஸ்பெர்ரி ஃபை
அவரது உண்மையான முன்மாதிரி சாதனத்தில் உள்ள ராஸ்பெர்ரி ஃபை, ஒரு சர்வோ மோட்டார் மற்றும் ஒரு லெகோ மெக்கானிக்கல் ஆர்ம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சென்சார்கள் எதிரில்வரும் முகப்புவிளக்கை கண்டறியும்போதெல்லாம், அந்த மெக்கானிக்கல் ஆர்ம் முகப்புவிளக்கின் ஒளிக்கற்றையை குறைந்து, பின்னர் வாகனம் கடந்த பின்னர் அதை மீண்டும் ஏற்கனவே இருந்த நிலைக்கு திருப்பும்.

ஒளிக்கற்றை அளவை மாற்ற முடியும்
இருப்பினும் தனது கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவிக்காத கண்பர்தி, நவீன கார்களில் இணைக்கக்கூடிய மற்றும் ஓட்டுநர்கள் அருகில் எந்த நகரும் பாகங்களும் இல்லாத ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார். எனவே தனது சாதனத்தை மேலும் மெருகேற்றி காரின் ஆன்போர்டு கண்டறிதல் அமைப்புடன் தொடர்புகொள்ளும் திறனுடைய வகையில் ஸ்மார்ட்போனுடன் அதை இணைத்தார். இதன்மூலம் காரின் அமைப்புகள் தேவைப்படும் போது தானாக முகப்பு விளக்குகளின் ஒளிக்கற்றை அளவை மாற்ற முடியும்.

மலிவு விலையில்
நம்பமுடியாத அளவிற்கு மலிவு விலையில் தயாரிக்கக்கூடிய இந்த சாதனத்தை உருவாக்கிய அவரது பணிக்கு நிச்சயம் நன்றி கூறவேண்டும். இதில் மேலும் சிறப்பு என்னவெனில், வாகனம் தயாரித்த ஆண்டு போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல், எளிதாக ஏற்கனவே இருக்கும வாகனத்தில் இணைக்கலாம். இந்த அம்சத்தை தொடக்கத்தில் இருந்து வாகனத்தை உருவாக்கும்போது இணைக்கவேண்டியதில்லை.

பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்
கண்பர்தி கூறுகையில், தனது அமைப்பு அல்லது இதுபோன்ற ஏதாவது ஒரு அமைப்பு உலகத்தைச் முழுவதும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புவதாத கூறுகிறார். இதன் மூலம் நாம் அனைவரும் இரவு நேர பயணத்தில் சாலையில் ஒருவருக்கொருவரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications