Home
News

பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான யுத்தத்திற்கு உதவும் புதிய தொழில்நுட்பம்.!

இதனால் பல்வேறு பயன்கள் இருந்தாலும், மாசுபாட்டுக்கு பேர்போனது பிளாஸ்டிக் மற்றும் இதை மறுசுழற்சி செய்வதும் மிக கடினம்.

By Vivek Sivanandam

உலகமெங்கும் அதிக அளவில் பரவலாக பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது பிளாஸ்டிக். பேக்கிங் செய்வதில் துவங்கி பிளாஸ்டிக் முட்டை வரை நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது பிளாஸ்டிக்.

இதனால் பல்வேறு பயன்கள் இருந்தாலும், மாசுபாட்டுக்கு பேர்போனது பிளாஸ்டிக் மற்றும் இதை மறுசுழற்சி செய்வதும் மிக கடினம். உலக பொருளாதார அமைப்பின் அறிக்கைப்படி, 2050ல் கடலில் உள்ள மீன்களின் எடையைக் காட்டிலும் பிளாஸ்டிக்கின் எடை அதிகமாக இருக்குமாம். மேலும் இந்த பிளாஸ்டிக் நிறுவனங்கள் உலகின் மொத்த எண்ணை நுகர்வில் 20% மற்றும் கார்பன் 15%ம் பயன்படுத்துகின்றன.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்-ல் இருந்து முழுமையாக விடுபட என்ன வழி? ஏன் இதை மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம் என்ற கேள்விகள் எழாமல் இருக்கவில்லை! பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்ற தவறான கருத்து நிலவுகிறது. உலகம் முழுவதும் செய்வது போல இந்தியாவிலும் பிளாஸ்டிக் கீழ்சுழற்சி தான் செய்யப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் உண்மையான பிளாஸ்டிக் தரத்தில் இல்லாமல் இருப்பதால், கீழ்சுழற்சி செய்து குறைந்த தர பிளாஸ்டிக் உற்பத்திசெய்யப்படுகிறது. காகிதம்,அலுமினியம், கண்ணாடி போல பிளாஸ்டிக்-ஐ அவ்வளவு எளிதாக மறுசுழற்சி செய்து அதன் உண்மையான நிலையை அடையவைக்க முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்து மீண்டும் ஒரு பாட்டிலை செய்ய முடியாது. கார்பெட் அல்லது சின்தடிக் உடைகள் தான் தயாரிக்க முடியும்.

அறிவியல்

அறிவியல்

இந்தியாவில் ஒரு ஆண்டில் நுகரப்படும் 20 மில்லியன் டன் பிளாஸ்டிக்கில், 80% கீழ்சுழற்சி செய்து தரம் குறைந்த பொருட்களே தயாரிக்கப்படுவதால் 1.8மில்லியன் டாலர் நஷ்டம் ஆகிறது. இதற்கு காரணம் இந்த துறையில் பயன்படுத்தப்படும் மறுசுழற்சி முறைகள் அறிவியல் பூர்வமாக இல்லாததே. பேன்யான் நேசன் நிறுவனம் மதிப்பு சங்கிலியை ஒருங்கிணைத்து, ஒழுங்குபடுத்தவும், புதுமையான பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனில்லாத பிளாஸ்டிக்ஐ மதிப்பு கூட்டவும் உதவுகிறது என்கிறார் பேன்யான் நேசன் நிறுவனத்தின் சி.ஈ.ஓ மற்றும் இணை நிறுவனரான மணி வஜூபய்.

நுகர்வோர்கள்

நுகர்வோர்கள்

நுகர்வோர்கள் பயன்படுத்திய மற்றும் தொழில்துறை குப்பை பிளாஸ்டிக்ஐ உண்மையான உயர்தர பிளாஸ்டிக்காக மறுசுழற்சி செய்து தயாரிக்கிறது பேன்யான். பழைய பிளாஸ்டிக் பொருட்களில் எண்ணெய், சேம்ப், நுரை போன்ற பொருட்கள் இருப்பதால் தான் அதன் தரம் குறைந்து கீழ்சுழற்சி செய்யப்படுகிறது. சில சமயங்களில் லெட், பாஸ்பரஸ் போன்ற மனிதருக்கு தீங்கி விளைவிக்கும் பொருட்களும் பிளாஸ்டிக்கில் இருக்கும்.

பேன்யான் நேசன்

பேன்யான் நேசன்

"பேன்யான் நேசன் இவற்றையெல்லாம் மாற்ற நினைத்தது. அதற்காக முழுமையான மதிப்பு சங்கிலி முறையை பயன்படுத்தி புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெயிண்ட், இங்க், உலோகங்கள், லேபில், தூசிகள், எண்ணெய் போன்றவற்றை நீக்கி பிளாஸ்டிக்கை தூய்மையான பிளாஸ்டிக்கை பெற முடியும்.

டாடா மோட்டார்

டாடா மோட்டார்

டாடா மோட்டார் போன்ற நிறுவனங்களிடம் விளக்கி , சுழல் பொருளாதாரம் என்ற வழிமுறையின் அடிப்படையில், உற்பத்தியின் போது வெளியேறும் கழிவுகளை மூலப்பொருட்களாக மாற்றும் முறையை பயன்படுத்த வைத்தது. இந்தியாவின் முதல் 'பம்ப்பர் டூ பம்ப்பர்' மறுசுழற்சியை டாடா மோட்டர் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியது பேன்யான்.

மாசு

மாசு

பொதுவாக பம்ப்பர் பாலி யூரித்தேன் அல்லது பாலி கார்பனேட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதை வலுவாகவும், தாக்குபிடிக்க கூடியதாகவும் மாற்ற இந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பாலிபீனேலின் ஆக்ஸைடு சேர்க்கின்றனர். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் பம்ப்பர் செய்ய, அதில் மாசு மற்றும் குப்பைகள் இருக்க கூடாது. இதற்கான செலவு குறைவு என்னபோதிலும், பம்பரில் உள்ள பெயிண்டை நீக்குவது என்பது முடியாத ஒன்று.

ஆனால் பேன்யான் நேசன் தொழில்நுட்பத்தின் மூலம் இதை எளிதாக செய்து, குறைந்த விலையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பம்ப்பரை உருவாக்கமுடியும்.

இப்போதைக்கு பேன்யான் நிறுவனம் வாகன உற்பத்தியாளருக்கான பம்ப்பர் மறுசுழற்சியை மட்டும் செய்து வந்தாலும், லே-ரியால் நிறுவனத்தின் சாம்பு பாட்டில்களை 'பாட்டில் டூ பாட்டில்' மறுசுழற்சி செய்யும் திட்டத்திலும் பணியாற்றிவருகிறது.

மலிவு விலை

மலிவு விலை

பேன்யான் நிறுவனம் தற்போது பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஒரு தகவல் நுண்ணறிவு தளத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகர அரசுகள் , தங்கள் நகரத்தில் எங்கெல்லாம் குப்பைகள் உள்ளன என கண்டறிந்து, அதை கண்காணித்து, ஒருங்கிணைத்து, தகவல்களை ஆராய்ந்து துல்லியமாகவும் விரைவாகவும், மலிவு விலையிலும் குப்பையை மேலாண்மை செய்ய உதவுகிறது. தெலுங்கானா அரசு பேன்யான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மாநிலும் முழுவதும் இந்த தளத்தை செயல்படுத்தவுள்ளது.

Best Mobiles in India

English summary
This startup's tech could be tipping point in our fight against plastic pollution : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X