Home
News

அடிச்சான் பாரு Airtel.. ஒரே ரீசார்ஜ்ஜில் 2 பேருக்கு நன்மைகள்.. செம்ம லாபம் தரும் திட்டம்.. என்ன விலை?

ஒன்றல்ல, இரண்டல்ல.. பிரத்யேகமான நன்மைகளை (Exclusive Benefits) வழங்கும் பல வகையான போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்கள் ஆனது பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திடம் உள்ளன. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவைகள் எல்லாமே ப்ரீபெய்ட் விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

உதாரணமாக, ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.300 என்கிற வரம்பில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.359 மற்றும் ரூ.299 ட்ரூலி அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களை (Truly Unlimited Plans) கூறலாம். இவ்விரு திட்டங்களும் முறையே 1 மாதம் மற்றும் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.

அடிச்சான் பாரு Airtel.. ஒரே ரீசார்ஜ்ஜில் 2 பேருக்கு நன்மைகள்!

ஒருவேளை உங்களுக்கு இதைவிட லாபகரமான திட்டம் தேவை என்றால்.. ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல் இன்ஃபினிட்டி ஃபேமிலி போஸ்ட்பெய்ட் பிளானை (Airtel Rs.599 Infinity Family Postpaid Plan) கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் இது ஆளுக்கு ரூ.300 என்கிற செலவில் ஒரே ரீசார்ஜ்ஜின் 2 பேருக்கு நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.599 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல்லின் ரூ.599 இன்ஃபினிட்டி ஃபேமிலி பிளானின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் இது மொத்தம் 2 கனெக்ஷன்களை (2 Connections) வழங்குகிறது: அதில் ஒன்று ப்ரைமரி கனெக்ஷன் (Primary Connection) ஆகும், மற்றொன்று ஆட்-ஆன் கனெக்ஷன் (Add-on Connection) ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் வாய்ஸ் கால் (Voice Call) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை பொறுத்தவரை, ப்ரைமரி கனெக்ஷன் ஆக இருந்தாலும் சரி, ஆட்-ஆன் கனெக்ஷன் ஆக இருந்தாலும் சரி எந்த வேறுபாடும் இருக்காது. இரண்டு கனெக்ஷன்களுக்குமே அன்லிமிடெட் வாய்ஸ் (லோக்கல், எஸ்டிடி, மற்றும் ரோமிங்) கால் நன்மை கிடைக்கும்.

எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, இரண்டு கனெக்ஷன்களுக்குமே ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (உள்ளூர், எஸ்டிடி, ரோமிங்) கிடைக்கும். ஒருவேளை நீங்கள் 100 மெசேஜ் என்கிற ஒதுக்கீட்டை தாண்டிவிட்டால், அதன்பிறகு அனுப்பப்படும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். (ஹோம் - லோக்கல் / எஸ்டிடி எஸ்எம்எஸ் 10 பைசா; ரோமிங் - லோக்கல் 25 பைசா மற்றும் எஸ்டிடி 38 பைசா வசூலிக்கப்படும்).

டேட்டா நன்மையை பொறுத்தவரை, ஏர்டெல் ரூ.599 இன்ஃபினிட்டி ஃபேமிலி பிளானின் கீழ் உள்ள 2 வாடிக்கையாளர்களுக்கும் மொத்தம் 105ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா (105GB Monthly Data) கிடைக்கும். அதில் 75ஜிபி டேட்டாவானது ப்ரைமரி கனெக்ஷனுக்கும் மீதமுள்ள 30ஜிபி டேட்டா ஆட்-ஆன் கனெக்ஷனுக்கும் கிடைக்கும்.

கூடுதலாக, ரூ.599 திட்டத்தின் கீழ் டேட்டா ரோல்ஓவர் ஆதரவும் (Data Rollover Support) உள்ளது. இதன் கீழ் பயன்படுத்தாத டேட்டா ஒதுக்கீட்டில் 200ஜிபி வரையிலான டேட்டாவை நகர்த்த முடியும். ஒருவேளை ஒதுக்கப்பட்ட டேட்டாவை நீங்கள் பயன்படுத்தி விட்டால், 1 எம்பி-க்கு 2 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கபடும்.

டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை தவிர்த்து ரூ.599-ன் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் (Airtel Thanks Benefits) அணுக கிடைக்கும். இதன்கீழ் 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா, 1 வருடத்திற்க்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தா, எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மொபைல் பேக் மற்றும் விங்க் ம்யூசிக் பிரீமியம் சந்தா போன்ற ஓடிடி நன்மைகள் இலவசமாக கிடைக்கும்.

ஓடிடி நன்மைகளுடன் சேர்த்து, ரூ.599 ஆனது 1 வருடத்திற்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24|7 Circle Membership), 1 டிவைஸிற்கான ஹேண்ட்செட் ப்ரொடெக்ஷன் (Handset protection) மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் சர்வீஸ் (Blue Ribbon Bag Service) போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Single Airtel Postpaid Plan Offers Unlimited Voice Call Free SMS Upto 75GB Data For 2 Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X