7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!

|

சிறிய நிறுவனங்கள் 'ரிஸ்க்' எடுக்க விரும்பாது, வித்தியாசமான முயற்சிகளை 'ட்ரை' செய்யாது என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

ஏனெனில் வளர்ந்து வரும் ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 7ஜிபி ரேம், 50 எம்பி கேமரா மற்றும் 6.6-இன்ச் டிஸ்பிளே போன்ற "வேற லெவல்" அம்சங்களை பேக் செய்கிறது.

அதென்ன நிறுவனம்? அது என்ன மாடல்? பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்றால் சரியாக என்ன விலை? இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வேற யாரு நம்ம டெக்னோ தான்.. அதுவும் ஸ்பார்க் சீரீஸில்!

வேற யாரு நம்ம டெக்னோ தான்.. அதுவும் ஸ்பார்க் சீரீஸில்!

இந்த டாப்பிக்கின் ஹீரோ, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ (Tecno) தான்.

இந்நிறுவனம் இந்தியாவில், அதன் மிகவும் பிரபாலான ஸ்பார்க் சீரிஸின் கீழ் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது. அந்த மாடல் டெக்னோ ஸ்பார்க் 8பி (Tecno Spark 8P) ஆகும்.

அங்குட்டும் இல்லாத.. இங்குட்டும் இல்லாத - 7ஜிபி ரேம்!

அங்குட்டும் இல்லாத.. இங்குட்டும் இல்லாத - 7ஜிபி ரேம்!

பொதுவாக, ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்றால் அது 4ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும். இல்லையென்றால் 6ஜிபி ரேம்-ஐ வழங்கும்; அதுவே ஆஹா.. ஒஹோ என்று பேசப்படும்.

ஆனால், டெக்னோ ஸ்பார்க் 6பி மாடலில் 7ஜிபி ரேம் இருக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சியும் கூட, நல்ல வியாபார தந்திரமும் கூட.

நிச்சயமாக, இதில் டெக்னோ நிறுவனத்தின் மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது 3ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை பயன்படுத்தி மொத்த ரேம்-ஐ 4ஜிபி இலிருந்து 7ஜிபி ஆக அதிகரிக்க வேண்டும்.

இந்திய கம்பெனி-னா என்ன அவ்ளோ கேவலமா போச்சா? ஜூலை 7 பார்த்துக்கலாம்!இந்திய கம்பெனி-னா என்ன அவ்ளோ கேவலமா போச்சா? ஜூலை 7 பார்த்துக்கலாம்!

ரேம் மட்டுமல்ல கேமராவும், டிஸ்பிளேவும் கூட மாஸ்-ஆ இருக்கு!

ரேம் மட்டுமல்ல கேமராவும், டிஸ்பிளேவும் கூட மாஸ்-ஆ இருக்கு!

வெளியான டீஸர், Tecno Spark 8P ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

தவிர இந்த ஸ்மார்ட்போன் 1080x2408 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.6-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ டாட் நாட்ச் டிஸ்பிளேவையும் பேக் செய்கிறது.

சரியாக எப்போது அறிமுகமாகும்?

சரியாக எப்போது அறிமுகமாகும்?

தற்போது வரையிலாக டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மட்டுமே, நிறுவனத்தின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் டீஸ் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது இந்த ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இது வெளியாக அதிக காலம் எடுத்துக்கொள்ளாது, "விரைவில்" அறிமுகமாகும்.

இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!

இந்தியாவில் என்ன விலைக்கு வரும்?

இந்தியாவில் என்ன விலைக்கு வரும்?

Tecno Spark 8P ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதே ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸில் தோராயமாக ரூ.10,800 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவிலும் ஏறக்குறைய அதே விலையை நாம் எதிர்பார்க்கலாம்.

அப்போது இதன் 'க்ளோபல் வேரியண்ட் 'ஏனெனின் அம்சங்களை பேக் செய்கிறது?

அப்போது இதன் 'க்ளோபல் வேரியண்ட் 'ஏனெனின் அம்சங்களை பேக் செய்கிறது?

டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 6.6-இன்ச் FHD+ டாட் நாட்ச் டிஸ்பிளேவை, 1080x2408 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 480 பிபிஐ (ppi) உடன் வழங்குகிறது.

மேலும் இது ஆக்டா-கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது, (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ப்ராசஸர்கள் மூலம் இயக்கப்படும்) பிலிப்பைன்ஸ் வேரியண்ட்-ஐ பொறுத்தவரை இது MediaTek Helio G70 SoC மூலம் இயக்கப்படுகிறது.

1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!

பேட்டரி - எப்படி?

பேட்டரி - எப்படி?

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ கொண்டு இயங்கும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் டூயல் ஃபிளாஷ் மாட்யூல் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பெறுகிறது.

இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. கடைசியாக, இது DTS ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்டுடன் வருகிறது மற்றும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Photo Courtesy: Tecno Website

Best Mobiles in India

English summary
This Rs 10000 Budget Smartphone Packs 7GB RAM 50MP Triple Camera and more Tecno Spark 8P India Launch Confirmed

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X