சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

|

சில நேரங்களில் சிரிஞ்ச்களைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் நம் உடலில் இருந்து இரத்தத்தை எடுப்பது உண்மையில் ஆச்சரியமானது அல்ல. மருத்துவர்கள் அல்லது செவிலியர் சரியான நரம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் பலமுறை சிரிஞ்சுகளை குத்தி நம்மை சிரமப்படுத்துவதை நாம் பார்த்திருக்கின்றோம். இதற்கு முடிவு கட்ட ஆராய்ச்சியாளர்கள் விரைவில் இதற்கு ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர்.

சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

R ரட்ஜர்ஸ் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர் இந்த ரோபோட் நரம்புகளை மிக துல்லியமாகக் கண்டுபிடித்து உங்கள் உடலில் இருந்து இரத்தத்தை டாக்டர்களைவிட மிகவும் திறமையாக எடுக்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை
சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

இந்த வகை ரோபோ அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி நம் தோலின் கீழ் பார்க்க, அதாவது, இரத்தத்தை எடுக்க மிகவும் பொருத்தமான நரம்பைக் கண்டுபிடிக்கின்றது. இந்த ரோபோவை வைத்து 31 பேர்களிடம் 'இரத்தத்தை உறிஞ்சி சோதனை செய்ததில் அனைவரிடமும் சரியாக, மிகச்சரியான நரம்பை எடுத்து வலியே இல்லாமல் ரத்தத்தை சிரிஞ்சியில் எடுத்துள்ளது. இந்த இயந்திரத்தின் உதவியால் நரம்புகள் தெளிவாகத் தெரிகிறது என்பதும் இந்த இயந்திரம் 97 சதவிகிதம் துல்லியமாக இரத்தத்தை எடுக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சரியான நரம்புகளைக் கண்டறிவது சற்று கடினமாக இருந்தால், அந்த எண்ணிக்கை இன்னும் பாராட்டத்தக்க 87 சதவீதமாகக் குறைகிறது.
சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

ரோபோவிற்குள் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மிகத்துல்லியமாக இந்த பணியை செய்து ரத்த மாதிரிகள் மற்றும் ஒரு மையவிலக்கு அடிப்படையிலான இரத்த பகுப்பாய்வி ஆகியவற்றைக் கையாள்கிரது. இந்த ரோபோவின் உருவாக்கம் இன்னும் அதன் ஆரம்ப கட்டங்களில் உள்ளதாகவும், காலப்போக்கில், ஆராய்ச்சியாளர்கள் இந்த ரோபோவை ஸ்கேனிங் திறன்களுடன் மிகவும் துல்லியமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த ரோபோக்கள் மருத்துவத்துறையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் எதிர்காலத்தில் இந்த இயந்திரங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர வாகனங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஐசியூ உள்பட. அவசர அறைகளில் IV களை வசதியாக நிறுவுவதற்கும் அல்லது டயாலிசிஸ் செய்வதற்கும் இந்த இயந்திரங்கள் உதவக்கூடும் என்றும் தெரிகிறது.

சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

முன்னணி எழுத்தாளர் ஜோஷ் லீபீமரின் அவர்கள் இதுகுறித்து கூறும்போது, ’இது போன்ற ஒரு சாதனம் மருத்துவர்களுக்கு இரத்த மாதிரிகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் பெறவும், தேவையற்ற சிக்கல்களையும் வலியையும் தடுக்கவும் உதவும் என்றும், பல ஊசி செருகும் முயற்சிகளிலிருந்து நோயாளிகளின் இரத்தத்தை இது நிச்சயமாக சரியான திறமையுடன் உறிஞ்சும் என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் நோயாளியின் செயல்பாட்டை அமைதிப்படுத்த ஒரு வழியைக் கண்டால் அது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Best Mobiles in India

English summary
This Robot Will Draw Your Blood Better Than Doctors, Without Causing Any Pain : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X