ஐபோன் 7 முற்றிலும் இலவசம், பெறுவது எப்படி??

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 இலவசமா, இது உண்மையா, யாராவது ஏமாத்திட போறாங்க!

இப்படியெல்லாம் யோசிக்காதீங்க, உண்மையிலேயே ஆப்பிள் ஐபோன் 7 போனை இலவசமா கொடுப்பாங்க. ஏன் இப்படித் தராங்க, இலவசமா வாங்க என்ன செய்யனும்??

ஐபோன் 7 கிட்னி விற்காமலேயே இலவசமா வாங்கிட என்ன செய்யனும்னு பாருங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிவ் அவே போட்டி

கிவ் அவே போட்டி

பிரபல ஸ்மார்ட்போன் வரத்தகர்கள் தங்களது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது சில போட்டிகளை நடத்தி இலவசமாக ஸ்மார்ட்போன்களை வழங்குவதைக் கிவ் அவே என அழைப்பர். ஐபோன் 7 போனினையும் கிவ் அவே முறையில் வழங்குகின்றது இந்த நிறுவனம், ஆனால் இந்தப் போட்டி சற்றே விசித்திரமானது.

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மகிப் பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தக நிறுவனமான Allo.ua, ஐபோன் 7 கிவ் அவே போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி போட்டியில் வெற்றி பெறும் முதல் ஐந்து பேர் இலவசமாக ஐபோன் 7 போனினை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

விதிமுறை

விதிமுறை

இந்தப் போட்டியின் விசித்திர விதிமுறை என்னவென்றால், போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயரினை அதிகாரப்பூர்வமாகச் சிம் ஐபோன் "Sim iPhone" அதாவது செவன் ஐபோன் என ஆங்கிலத்தில் பொருள்படும் படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெமரி

மெமரி

இந்தப் போட்டியிலும் ஒருவர் கலந்து கொண்டு வெற்றிப் பெரும் பட்சத்தில் எத்தனை அளவு மெமரி கொண்ட கருவி வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆனால் கொடுத்தால் கருப்பு கலர் ஐபோன் தான் கொடுப்போம் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தேவை

என்னென்ன தேவை

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போட்டியாளர்கள் தங்களது பெயர் மாற்றப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் அதனுடன் எடுக்கப்பட்ட செல்பீயினை அனுப்ப வேண்டும். பின் இவற்றை ஸ்டோரில் காண்பிக்க வேண்டும்.

கடினம்

கடினம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்சனை காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவு அந்நாட்டின் செலாவணி மதிப்பைக் குறைந்துள்ளது. அந்நாட்டில் சராசரி வருமானம் $203, ஆனால் ஐபோன் 7 விலை $917, ஆகும். இத்தகைய விலை கொடுத்து ஐபோன்களை வாங்குவது கடினமான ஒன்றாகும்.

விளம்பரம்

விளம்பரம்

இந்தப் போட்டியும் ஒரு வித விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபோன்களை வாங்க மக்கள் தங்களது கிட்னி போன்றவற்றை விற்றிருக்கும் நிலையில், எத்தனே பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this retailer is giving away free iPhone 7
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்