இந்த பழைய நாணயம் லட்சம் விலை போகும்! ஆன்லைனில் அதிகரிக்கும் பழைய பொருட்களுக்கான ஏலம்.!
'ஓல்ட் இஸ் கோல்டு' என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது, அதற்கான உண்மையான விளக்கம் பழைய பொருட்கள் அனைத்தும் பொக்கிஷமாகக் கருதப்படுவதே ஆகும். எப்பொழுதும் பழைய பொக்கிஷங்களுக்கு அதிக மதிப்புண்டு, அப்படி தான் இப்பொழுது பழைய நாணயங்களுக்கு ஆன்லைனில் மவுசு அதிகரித்துள்ளது. உங்களிடம் இந்த நாணயங்கள் இருந்தால் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்க உங்களுக்கு வாய்ப்புள்ளது.

நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்
பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர் நீங்கள் என்றால், நிச்சயமாக இது உங்களின் அதிர்ஷ்ட காலம் என்றே கூறலாம். இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில நாணயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆக வாய்ப்பிருக்கிறது.

ஆன்லைன் ஏலம்
பழைய பொக்கிஷங்களைப் பல லட்சம் கொடுத்து வாங்க இந்தியாவிலும் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆன்லைன் ஏலத்தின் மூலம் தான், அவர்களுக்குத் தேவையான பொக்கிஷங்களை தேடிப்பிடித்து வாங்குகின்றனர்.

பழங்கால பொருட்களுக்கான மவுசு
பழங்கால பொருட்களுக்கான மவுசு சமீபகாலத்தில் சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதிகம் தேடப்படும் பொருளாகப் பழங்கால பொருட்கள் உள்ளது. இதை வாங்கச் சர்வதேசச் சந்தையில் கடும் போட்டியும் நிலவி வருகிறது. அதிக விலைக்கு இவற்றை விற்பனை செய்ய ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாதா வைஷ்ணோ தேவி சன்னதி நாணயம்
பழங்கால நாணயங்கள் தவிர்த்து பழங்கால சிற்பங்கள், கலைப்பொருட்கள், கேமிராக்கள், வாகனங்கள் போன்ற பொக்கிஷங்களுக்கும் ஆன்லைனில் மவுசு அதிகமுள்ளது. இப்போது பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில் 'மாதா வைஷ்ணோ தேவி' சன்னதி படத்துடன் இருக்கும் நாணயத்திற்கு மவுசு அதிகமாக உள்ளதை நீங்கள் காணலாம்.

லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு ஆள் இருக்கிறதா?
2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மாதா வைஷ்ணோ தேவி' சன்னதி படத்துடன் இருக்கும் இந்த நாணயங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மாதா வைஷ்ணோ தேவி இந்து மத நம்பிக்கையில் பெரிய இடத்தை பிடித்துள்ளது, இதனால் வைஷ்ணவதேவி கோவில் பொறிக்கப்பட்ட நாணயத்தை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவதற்குக் கூட இந்தியாவில் ஆட்கள் உள்ளனர்.

786 எண்ணுடன் இருக்கும் ரூபாய் நோட்டு
அதேபோல், இந்தியாவில் அதிக டிமாண்ட் உள்ள மற்றொரு பொருள் ‘786' என்ற எண்ணுடன் இருக்கும் ரூபாய் நோட்டுகள் தான், இஸ்லாமியர்கள் இந்த எண் கொண்ட ரூபாய் நோட்டுகளைப் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் இணையத்தில் இதன் மவுசும் அதிகமாகவுள்ளது. இதை வாங்குவதற்கும் பலர் விருப்பம் காட்டுகின்றனர்.

லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் லாபம் ஈட்டலாம்
இதில் ஏதேனும் ஒரு நாணம் அல்லது ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்.


Click it and Unblock the Notifications