Home
News

Google Pay, PhonePe க்கு குட்பை.. ரிவார்ட்களை வைத்து பணம் செலுத்தும் புதிய UPI ஆப் அறிமுகம்!

ரிவார்ட் அடிப்படையிலான பேமண்ட் நெட்வொர்க் (Reward-based payment network) ஆன டிவிட் (TWID) ஆனது டிவிட் யுபிஐ (TWID UPI) என்கிற புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியா முழுவதும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கொள்முதல்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.

டிவிட் நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவிட் யுபிஐ ஆப் பயனர்கள் தங்கள் ரிவார்ட் பாயிண்ட்களை யுபிஐ பேமண்ட்களின் செக் அவுட்டில் இணைக்க அனுமதிக்கிறது. அதாவது பாயிண்ட்களை இன்ஸ்டன்ட் சேவிங்ஸ் ஆக மாற்றுகிறது மற்றும் உங்கள் பாக்கெட்டில் இருந்து நேரடியாக வெளியேறும் செலவுகளை குறைக்கிறது.

ரிவார்ட்களை வைத்து பணம் செலுத்தும் புதிய UPI ஆப் அறிமுகம்!

டிவிட் ஸ்டார்ஸ் லாயல்டி புரோகிராம்: இது எவ்வாறு செயல்படுகிறது? டிவிட் நிறுவனம் தனது யுபிஐ ஆப்பில் டிவிட் ஸ்டார்ஸ் என்ற லாயல்டி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிட் ஆப்பில் செய்யப்படும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் பயனர்கள் டிவிட் ஸ்டார்களை பெறுவார்கள். இந்த டிவிட் ஸ்டார்களை பல்வேறு வணிக கூட்டாளர்களிடமிருந்து சேகரித்து ரீடெம் செய்ய முடியும் என்று டிவிட் தெரிவித்துள்ளது.

இந்த ஆப்பை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்? டிவிட் தளம் ஆனது தற்போது 1,00,000 க்கும் மேற்பட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிகர்களை ஆதரிக்கிறது. இதில் ஸ்விக்கி (Swiggy), ஜியோ மார்ட் (JioMart), மேக்மைட்ரிப் (MakeMyTrip), புக் மை ஷோ (BookMyShow), மை ஜியோ (MyJio), இக்ஸிகோ (Ixigo), ரெட் பஸ் (redBus), மெக்டொனால்ட்ஸ் (McDonald's) மற்றும் பிற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.

இந்த நிறுவனங்கள் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய ரிவார்ட் தொகுப்பை கொண்ட வழங்குநர்கள் உடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் டிவிட் நிறுவனம் கூறுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், டிவிட் கிட்டத்தட்ட 3 பில்லியன் பாயிண்ட்களை ரீடீம் செய்ய அனுமதித்ததாகக் கூறுகிறது.

இதோடு இண்டஸ்லேண்ட் பேங்க் (IndusInd Bank), யெஸ் பேங்க் (Yes Bank), பிஓபி கார்டு (BOB Card), சூப்பர் காயின் (SuperCoin), ஸில்லியன் (Zillion), ஜூபிட்டர் ஜுவெல்ஸ் (Jupiter Jewels), கிரெட் (CRED) மற்றும் பல போன்ற முக்கிய கூட்டாளர்கள் உட்பட சுமார் 15 வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் டிவிட் தெரிவித்துள்ளது.

டிவிட் நிறுவனத்தின் கூற்றுப்படி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் இயற்கையான நீட்டிப்பாக 'ரிவர்ட்ஸ்களுடன் பணம் செலுத்துங்கள்' என்பதை நிலைநிறுத்துவதன் மூலம், ரிவார்ட் திட்டங்களுக்கும் உண்மையான பையிங்களுக்கும் இடையிலான நீண்டகால இடைவெளியை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், டிவிட் இந்தியாவின் ஆஃப்லைன் வணிக டிஜிட்டல் கட்டண நிலப்பரப்பில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.

எங்களுடைய ஆப் - ரிவார்ட் பாயிண்ட்களை ஸ்கேன் & பே பேமெண்ட்டுகளுக்கான 365 நாள் சேமிப்பாக மாற்றுகிறது என்று டிவிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆன அமித் கோஷல் கூறி உள்ளார். மேலும் டிவிட் ஆப்பின் வழியாக பயனர்கள் தங்கள் பேமண்ட் ரிவார்ட் பாயிண்ட்களை ஒருங்கிணைத்து - பல்வேறு வங்கிகள், பிராண்டுகளை ஒரே இடத்திலும் நிர்வகிக்கலாம்.

இதேபோல யுபிஐ தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை என்பிசிஐ (NPCI) ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளை இஎம்ஐ-களாக மாற்ற அனுமதிக்கும் ஒரு வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது உடனடியாக பணம் செலுத்தும் முறையை (Instantly convert payments) மாதாந்திர தவணைகளாக (Monthly installments) மாற்ற உதவும் வகையில் புதிய இஎம்ஐ அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது

இது வசதி - கார்டு அடிப்படையிலான பிஓஎஸ் பேமண்ட்களை (Card-based PoS payments) போலவே செயல்படும். அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்வைப்களை டெர்மினலில் நேரடியாக இஎம்ஐ-களாக பிரிக்கலாம். இந்த வசதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், இது தளத்தில் கடன் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பெரிய உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This New UPI App Allows Users to Do Payment with rewards points That is TWID UPI App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X