ஆளுக்கு 1 ஆர்டர்.. அல்டிமேட் விலையில் புது OnePlus நெக்பேண்ட்.. சிங்கிள் சார்ஜ்ல நம்ப முடியாத பேட்டரி லைஃப்!
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 மாதம் கழித்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் நெக்பேண்ட் (Neckband) ஆனது.. ஒருவழியாக இன்று (ஆகஸ்ட் 17) முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதோ விவரங்கள்:
ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிட்டிங்: கடந்த ஜூலை மாதம், ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி (OnePlus Bullets Wireless Z2 ANC) என்கிற நெக்பேண்ட் இயர்பட்ஸையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலான காத்திருப்புக்கு பிறகு, இப்போது தான் இந்த நெக்பேண்ட் இயர்பட்ஸ் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி விலை மற்றும் விற்பனை: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய நெக்பேண்ட்டின் இந்திய விற்பனை ஆகஸ்ட் 17 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் (OnePlus Online Store) வழியாக இதை ரூ.2,299 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி அம்சங்கள்: இந்த புதிய ஒன்பிளஸ் நெக்பேண்ட் இயர்பட்களில் ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Noise Cancellation) உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இது பேக்கிரவுண்ட்டில் உள்ள இரைச்சலை (Background noise) 45 டெசிபல் (45dB) வரை குறைக்கும்.
இந்த ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சமானது மூன்று மைக்ரோஃபோன்கள் (Microphones) மற்றும் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வரும் அழைப்புகள் இருப்பதை உருட்டி செய்கிறது; அது எவ்வளவு சத்தமாக இருந்தாலும் கூட!
ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி ஆனது 12.4 என்எம் டைனமிக் டிரைவர்ஸ் (12.4 nm Dynamic Drivers) உடன் வருகிறது. மேலும் இதன் இயர்பட்கள் ஆனது நல்ல சவுண்ட் குவாலிட்டி (Sound quality) மற்றும் வலுவான பாஸையும் (Strong bass) வழங்குகின்றன.
சுவாரசியமாக ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி ஆனது ஐபி55 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு மதிப்பீட்டை (IP55 Water and Sweat Resistance Rating) பெற்றுள்ளன. அதாவது இது பல வகையான உடற்பயிற்சிகளுக்கு ஏதுவானதாக இருக்கும்; வியர்வையால் இது பாதிக்கப்படாது.
ஒன்பிளஸின் இந்த புதிய நெக்பேண்ட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று இதன் பேட்டரி லைஃப் தான். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 28 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை (Up to 28 Hours Battery Life) வழங்குகிறது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது மிகவும் வேகமாக சார்ஜ் ஆகின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை வெறும் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்வதன் மூலம் உங்களுக்கு 20 மணிநேர மியூசிக் டைம் கிடைக்கும். கடைசியாக உங்களுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இருந்தால் கூகுள் ஃபாஸ்ட் பேர் 2 (Google Fast Pair2) வழியாக இந்த இயர்பட்ஸை விரைவாக கனெக்ட் செய்யலாம்.
ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி உடன் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன்களை விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோர்ட் 3 மாடல் ஆனது ரூ.33,999 க்கும், நோர்ட் சிஇ 3 மாடல் ஆனது ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








