மாஸ்டர் கார்டு க்ரெடிட் கார்டில் கைரேகை ஸ்கேனர், அப்படியா சொல்லவே இல்லை

Written By:

மாஸ்டர் கார்டு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய க்ரெடிட் கார்டுகளில் கைரேகை ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாஸ்டர் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை பாதுகாப்பாக இல்லாமல் இருந்த நிலையில் இந்த முறை இந்த கார்டுகளுக்கு நல்ல வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாஸ்டர் கார்டு க்ரெடிட் கார்டில் கைரேகை ஸ்கேனர், இது உண்மை தாங்க

தற்சமயம் லண்டனில் மட்டும் கிடைக்கும் இந்த க்ரெடிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டை விரலை கொண்டு அன்லாக் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் கைரேகை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாஸ்டர் கார்டு ஆப்பிள் பேயின் கூட்டாளியாக இருந்ததோடு அந்நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் கார்டு நியர்பை என்ற செயளியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் ஆப்பிள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

புதிய மாஸ்டர் கார்டு அமெரிக்காவில் வெளியாகுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் மற்ற நாடுகளில் வெளியாவது பற்றி எல்லா தகவல்களும் மர்மமாகவே உள்ளது. இருந்தும் இத்தகைய தொழில்நுட்பம் எல்லா நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

English summary
This Master Card' s Credit card Comes with Finger Print Scanner. Here you will know all about the new Finger print scanner enabled Credit Card.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot