போக்கிமான் மோகம் : ஆர்வ மிகுதியில் 12 கிலோ எடை குறைத்த வாலிபர்!

Written By:

உலகெங்கும் போக்கிமான் கோ மோகம் அதிகரித்து வருகின்றது. பல்வேறு சாதனைகள், சர்ச்சைகள் இருந்த போதும் இதை விளையாடுவோர் எண்ணிக்கை குறையவில்லை. இந்தியா போன்று வெளியாகாத நாடுகளிலும் மக்கள் இதனை ஆர்வமாக விளையாடி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாலிபர்

வாலிபர்

பிரிட்டனைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்கிமான் கோ விளையாடி 12 கிலோ எடையைக் குறைத்திருக்கும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் சுமார் 225 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்ததன் விளைவாக இவர் தன் உடல் எடையைக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாம் கிளார்க்

சாம் கிளார்க்

சாம் கிளார்க் என்ற வாலிபர் சுமார் 1390 பாக்கெட் மான்ஸ்டர்களை கண்டுபிடித்துள்ளார். போக்கிமான் தேடலினை ப்ரிமார்க் எனும் இடத்தில் நிறைவு செய்துள்ளார். இவர் டௌரஸ் எனும் முட்டையையும் கண்டுபிடித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

திருமணம் ஆகி நான்கு குழுந்தைகளுக்கு அப்பாவான சாம் கிளார்க் போக்கிமான் கோ விளையாடி உடல் எடையைக் குறைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கேம் தனது ஆர்வத்தைத் தூண்டியதாகவும் தெரிவித்தார்.

கருத்து

கருத்து

சாம் உடல் எடையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், எந்நேரமும் போனும் கையுமாக இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என சாம் கிளார்க் மனைவி ஹெய்லி தெரிவித்தார்.

உதவி

உதவி

தான் விளையாடுவதோடு போக்கிமான் கோ விளையாடும் மற்றவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான தந்திரங்களையும் சாம் வழங்கி வருகின்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
This Man Walked 225 Kms To Catch Pokemon And Lost 12 Kgs Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot