இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி..!

|

பூட்டும் சாவியும் எப்போதுமே நம்மை பரபரப்பாக வைத்துக் கொள்ள தவறுவதே இல்லை. கதவை பூட்டுவதற்கு முன் வரை பூட்டு, பூட்டிய பின் திரும்பி திறக்கும் வரை அதன் சாவி என இந்த இரண்டுமே நம் வாழ்வின் 'அத்தியாவசியமான' பரபரப்பாகி விட்டது என்றே கூறலாம், முக்கியமாக சாவி..!

இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி..!

வைத்த இடத்தில்தான் இருக்கிறதா இல்லை, எங்கயாச்சும் தவறி விட்டதா என்று மணிக்கு இரண்டு முறையாவது 'செக்' பண்ண வைப்பதில் சாவிகள் பெரிய கில்லாடிகள். வைத்த இடத்தில் சாவி இல்லையென்றால் அல்லது தொலைந்து போய் இருந்தால் குபீர் என்று கிளம்பி விடும் ரத்தக் கொதிப்பு.

கனவு உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் நடுவில் ஒரு நடனம்..!

அவ்வளவு முக்கியமான சாவிகள், இனி முக்கியமே இல்லை, அவ்வளவு ஏன் இனி சாவியே தேவை இல்லை என்று கூறி பரபரப்பு பார்ட்டிகளான நம்மை கூல் செய்ய வந்திருக்கிறது - ஒலா லாக்..!

ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

சாதாரணமான கதவு கைப்பிடி போலவேதான் காட்சியளிக்கும் இது, கைரேகை மூலமாக மட்டுமே திறக்கும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியை பிடித்து அதில் இருக்கும் சிறிய ஸ்க்ரீன் போன்ற இடத்தில் கட்டை விரலை வைத்து அழுத்தினால் போதும் பதிவு செய்யப்பட்ட உங்கள் கைரேகையை அறிந்து கொண்டு கதவை திறக்கும் இது, வேறு யாராவது திறக்க முயன்றால் தவறான கைரேகை என்று கண்டறிந்து அன்லாக்கை செயல் இழக்க செய்துவிடும்.

இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி..!

இதன் ஒலா ஸ்மார்ட் போன் ஆப் மூலமாகவும் கதவுகளை திறக்கவும், எதிர்பாராத நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சாவி உருவாக்கி தரவும் வழி வகை செய்துள்ளது ஒலா லாக் நிறுவனம். மார்ச் 2016 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஒலா லாக்கின் விலை 160 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Ola is the world's first keyless and phoneless Bluetooth enabled fingerprint smart lock.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X