பூமியின் இந்த இடத்தில் 6 மாதம் பகல்.. 6 மாதம் இரவு.. உங்க வாட்ச்லாம் வேலை செய்யாது.. நேரமே செல்லாத அதிசய பகுதி
நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பது என்று பேச்சு வழக்கில் ஒருவர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். உண்மையாகவே நேரம் என்ற ஒன்றே இல்லாத பகுதி (no time zone location) என்று இந்த பூமியில் ஒன்று உள்ளதென்று சொன்னால் நம்புவீர்களா?
சில சமயங்களில் வேலை காரணமாகவே, மன சோர்வு காரணமாகவோ என்ன நேரம் (time), என்ன தேதி (date) என்று தெரியாமல் நாம் குழம்பி தவித்திருப்போம். இதே நிலை வருடம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும். உலகின் இந்த பகுதியில் சூரியன் ஆண்டிற்கு ஒரு முறை தான் மறையுமாம். அதனால் இங்கு கடிகாரமே (clock) தேவையில்லை என்று கூறப்படுகிறது. இந்த அதிசய பகுதி, நமது பூமியின் வட துருவமாகும் (North pole).

பூமியில் டைம் ஜோன் இல்லாத ஒரே பகுதி (The only region on Earth without a time zone):
பூமியில் இருக்கும் ஒவ்வொறு பகுதியிலும் ஒரு டைம் ஜோன் (Time zone) பின்பற்றப்படும். இந்த டைம் ஜோன் ஆனது வானத்தில் இருக்கும் சூரியன் (sun) நிலையை கொண்டு கணிக்கப்பட்டிருக்கும் என்பதால் இடத்திற்கு இடம் இது மாறுபடும். உதாரணமாக இந்தியாவில் பின்பற்றப்படும் டைம் ஜோனை (IST) அமெரிக்காவில் பின்பற்ற முடியாது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
பூமியின் மாதிரியை எடுத்து பார்த்தால் அதன் குறுக்கே வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு (South pole) கோடுகள் வரையப்பட்டிருக்கும். இதில் இரண்டு கோடுகளுக்கு மத்தியில் இருக்கும் பகுதி ஒரு டைம் ஜோனை கொண்டிருக்கும். இப்படி பூமியானது 24 டைம் ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 24 கோடுகளும் பூமியின் வட துருவ பகுதியில் சந்திக்கும். இதனால் ஒன்றை ஒன்று ரத்து செய்துகொண்டு நேரம் என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிடுகிறது.
பூமி ஒரு அச்சை ஆதாரமாக வைத்து சுழன்றுகொண்டு இருக்கிறது. இந்த சுழற்சியால் தான் இரவு பகல் (day time) என்று நிகழ்கிறது. துருவப்பதுகுதியில் இந்த ஒரு நாள் கணக்கு செல்லாது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சூரியன் உதயமாகும். உதயமான சூரியன் மீண்டும் ஒரு முறை மட்டுமே மறையும் (sun only rises and sets once a year). இந்த அதிசயம் வட துருவத்தில் மட்டுமே நிகழ்கிறது.

பூமியின் இந்த இடத்தில் 6 மாதம் பகல்.. 6 மாதம் இரவு.. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சூரிய அஸ்தமனம் (6 months of day, 6 months of night in this part of the earth.. Sunset only once a year):
இதனால் மார்ச் முதல் செப்டம்பர் வரை முற்றிலும் பகலாகவும் (6 months day), மீதி உள்ள மாதங்கள் முற்றிலும் இரவாகவும் (6 months night) இருக்கும் அதிசயம் நிகழ்கிறது. அப்போ, இங்கே வசிக்கும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு போகலாம், எப்போது வேண்டுமானாலும் தூங்கலாமா என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்த பகுதியில் மனிதர்களே வசிக்க முடியாது. இது முற்றிலுமாக ஐஸ்கட்டி நீரால் சூழப்பட்டுள்ள ஒரு பகுதியாகும்.
அந்த ஐஸ்கட்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், இதனை பார்டர் (border) போட்டு வரையறுக்க முடியாது. மேலும் ஒரு லொக்கேஷனை (location) குறிப்பிட்டும் கூற முடியாது. ஒரு இடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இடத்தின் உருவம் மாறிக்கொண்டே இருக்கும். நிலப்பரப்போ அல்லது மக்கள் நடமாட்டமோ இல்லாத இந்த பகுதி ஆர்டிக் பெருங்கடலின் (Arctic) மத்தில் அமைந்துள்ளது.
எப்போதாவது ஆராய்ச்சி (Research) பணிக்காக பயணிப்பவர்கள் அந்த பகுதியை கடந்து சென்றால் தான் உண்டு. அப்போது, அந்த வழியாக செல்லும்போது எப்படி நேரத்தை கணக்கிடுவது என்று கேட்டால் அதற்கு பல வழிகள் உள்ளது. அவரவருக்கும் வசதியான நேரத்தை அவர் பின்பற்றிக்கொள்ளலாம். ஆச்சரியமாக உள்ளது தானே? அந்த வழியாக பயணிப்பவர்கள் அருகில் இருக்கும் டைம் ஜோனை பின்பற்றலாம்.
அல்லது அவரவர் நாட்டின் டைம் ஜோனைக்கூட பின்பற்றலாம். அது அவரவர் விருப்பம். அப்போது, தென் துவத்திற்கும் இதே கணக்கு தானா என்று கேட்டால், அது தான் இல்லை. இங்கு ஒரு-ஒரு பகுதிக்கும் ஒரு-ஒரு டைம் ஜோன் பின்பற்றப்படுகிறது. தென் துவருத்தில் பல ஆராய்ச்சி கூடங்கள் அருகில்-அருகில் நிறுவப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு ஆரய்ச்சி கூடத்திலும் ஒரு ஒரு டைம் ஜோன் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது மற்றொரு அதிசயம். உண்மையில் இயற்கை மிகவும் சுவார்ஸ்யமானது.


Click it and Unblock the Notifications








