அடிப்பொலி அம்பானி.. 388 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்.. இப்படி ஒரு பிளான் Airtel, BSNL கிட்ட இல்லவே இல்ல!
ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில் மொத்தம் 388 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்ம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியாவிடம் (Vodafone Idea) மட்டுமின்றி, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் கூட இல்லை. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவிடம் (Jio) மட்டுமே உள்ளது!
நாம் இங்கே பேசும் ஜியோ திட்டமானது, 23 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியுடன் சேர்த்தே, மொத்தம் 388 நாட்கள் என்கிற மிகப்பெரிய வேலிடிட்டியுடன் வருகிர்து. அதுமட்டுமன்றி ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான ஓராண்டு திட்டமாகவும் இது திகழ்கிறது.

இந்த ஜியோ திட்டத்தின் விலை ரூ,2999 ஆகும். "ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில் ஓஹோன்னு நன்மை"களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு சிறந்த தேர்வாகும். ஏனென்றால் இது டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் போன்ற அனைத்து நன்மைகளையும், தினமும் 7 ரூபாய் 72 பைசா என்கிற செலவில் வழங்குகிறது.
ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இது 365 நாட்கள் என்கிற வழக்கமான வேலிடிட்டி மற்றும் 23 நாட்கள் என்கிற எக்ஸ்ட்ரா வேலிடிட்டி என மொத்தமாக 388 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வழங்குகிறது. கூடவே ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் (Free SMS) வழங்குகிறது. மேலும் இது 2.5 ஜிபி என்கிற தினசரி டெய்லி டேட்டா நன்மையையும் (Daily Data) வழங்குகிறது.
அதாவது இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பெறும் மொத்த டேட்டாவின் அளவு 912.5 ஜிபி ஆகும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய டெய்லி டேட்டா லிமிட்டை (Daily Data Limit) தாண்டிவிட்டால், அதாவது 2.5ஜிபி தினசரி டேட்டா வரம்பை மீறிவிட்டால் அதன் பின்னர் உங்களுடைய இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
23 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியை தவிர்த்து, இது 75ஜிபி கூடுதல் டேட்டாவுடனும் வருகிறது. மேலும் இது ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோசெக்யூரிட்டி (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாவையும் (Free Subscriptions) வழங்குகிறது.
இதுபோன்ற சில அட்டகாசமான ஜியோ திட்டங்கள் ஆனது ஜியோவின் சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்களை (Jio Customers) தொடர்ந்து தக்கவைப்பதோடு நில்லாமல், பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனகளிடம் இருந்து வெயேறும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும்படி உள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








