Home
News

கேபிள் டிவி கதையை முடிச்சி விட்ட அம்பானி.. அதுவும் மாசம் ரூ.168 செலவில்.. Jio யூசர்களை கையில் புடிக்க முடியல!

வழக்கமாக பிராட்பேண்ட் கனெக்ஷனை பெறுபவர்கள் வீடுகளில் தான் "இனிமேல் இது எதுக்கு?" என்று கேபிள் டிவி கனெக்ஷன் கட் செய்யப்படும். ஆனால் மாதந்திரம் ரூ.168 செலவில் ஜியோ வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டமே உங்களில் வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்ய தூண்டினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? அப்படி என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

என்ன திட்டம்? முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவானது (Reliance Jio), அதன் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றின் கீழ் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களான சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய இரண்டையுமே இலவசமாக வழங்குகிறது. கூடவே ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்களுக்கான அணுகல்களையும் வழங்குகிறது.

கேபிள் டிவி கதையை முடிச்சி விட்ட அம்பானி.. அதுவும் மாசம் ரூ.168 செலவில

எல்லாற்றை விட முக்கியமாக இது ஜியோவின் ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (True Unlimited 5G Data) வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை போல் இல்லாமல்.. டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க வழிவகுக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் பிளானை (Entertainment Plan) போன்ற நன்மைகளை வழங்குகிறது. நாம் இங்கே பேசுவது ரூ.1049 திட்டத்தை பற்றித்தான்!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஓடிடி (OTT) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தவிர்த்து ரூ.1049 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இ லவச எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

டெய்லி 2ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி சலுகையை பெற தகுதியான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம். இதற்கு நீங்கள் ஜியோவின் 5ஜி கவரேஜ் மண்டலத்தின் (5G Coverage Zone) கீழ், 5ஜி எஸ்ஏ-வை ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை (5G SA Supported Smartphone) வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை உங்களால் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி சலுகையை பெற முடியவில்லை என்றால், ஜியோவின் ரூ.1049 திட்டத்தின் கீழ் கிடைக்கும் டெய்லி 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் (64 Kbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

சுவாரசியமாக ஜியோவின் முக்கிய போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனத்திடமும் கூட இதேபோன்ற ஒரு திட்டம் உள்ளது. இதுவும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது. ஆனால் இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அது ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டமாகும்.

பார்தி ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இரண்டாவது விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டமாகும். இதன்கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா என மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் கிடைக்கும்.

ரூ.3599 திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் பயனர்கள் தங்களுடைய மொபைல் நம்பர் மூலம் லாக்-இன் செய்வதன் மூலம் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) வழியாக வரம்பற்ற 5ஜி சலுகையோடு சேர்த்து ஓடிடி நன்மைகளையும் பெறலாம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் (Airtel Xstream Play Subscription) கீழ் சன் நெக்ஸ்ட், சோனி லைவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் இலவசமாக அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
This Jio Prepaid Plan Offers Both SonyLIV ZEE5 OTT With Daily 2GB Unlimited 5G Data For 84 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X