வெறும் ரூ.180-க்கு 10 OTT-களை இறக்கிய அம்பானி.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 10GB டேட்டா.. என்ன ரீசார்ஜ்?
ஜியோ (Jio) நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை கடுமையாக உயர்த்திய பின்பும் கூட நம்பர் 1 இடத்தில் இருக்க முக்கிய காரணம் - ஜியோ சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிரத்யேகமான திட்டங்கள் தான். அப்படியாக முழுக்க-முழுக்க ஓடிடி பிரியர்களை மனதில் கொண்டு.. மிகவும் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சுவாரசியமான திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம்.
அதென்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது ஜியோவின் ரூ.175 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். நம்பினால் நம்புங்கள், இந்த திட்டம் மொத்தம் 10 ஓடிடி ஆப்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது. இது பொழுதுபோக்கு பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும் அதேசமயம் ஒரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகவும் செயல்படும். இதன்கீழ் உங்களுக்கு 10ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதுவொரு டேட்டா பேக் என்பதால், இதன்கீழ் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இருக்காது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அந்த 28 நாட்களுக்கும் ரூ.175-ன் கீழ் கிடைக்கும் 12 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலையும், 10ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ரூ.175-ன் கீழ் கிடைக்கும் 10 ஓடிடி சந்தாக்களின் பட்டியல்: இதுதான் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஒரே ஒரு ரீசார்ஜ்ஜின் கீழ் உங்களுக்கு 10 ஓடிடி பிளாட்ஃபார்ம்களுக்கான இலவச அணுகல் கிடைக்கும். அந்த பட்டியலில் சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா (Jio Cinema), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), சன் நெக்ஸ்ட் (Sun NXT) போன்ற பிரபலமான ஓடிடி தளங்களும் உள்ளன.
கூடவே காஞ்ச லங்கா (Kanchha Lannka), பிளான்ட் மராத்தி (Planet Marathi), சௌபால் (Chaupal), ஹோய்ச்சோய் (HoiChoi) போன்ற ஓடிடி தளங்களும் உள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி, ரூ.175 திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கண்ட 10 ஓடிடி சந்தாக்களையும் ஜியோ டிவி ஆப் (Jio TV App) வழியாக இலவசமாக பார்க்க முடியும்.
ஜியோவின் எண்டர்டெயின்மெண்ட் கேட்டகிரியின் (Jio entertainment category) கீழ் வரும் ரூ.175 திட்டமானது மைஜியோ ஆப் (MyJio App) அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Jio official websit) ஆகிய இரண்டின் வழியாகவும், இதர மூன்றாம் தரப்பு ஆப்களின் வழியாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
இதுதவிர்த்து ஜியோ ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் மேலும் சில எண்டர்டெயின்மெண்ட் திட்டங்கள் உள்ளன: அவைகள் ரூ.329, ரூ.1029 மற்றும் ரூ.1049 ரீசார்ஜ்கள் ஆகும். இந்த 3 திட்டங்களுமே அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள், டெய்லி டேட்டா மற்றும் இலவச ஓடிடி சந்தாக்கள் (வாய்ஸ் கால் பலன்களை வழங்காத ரூ.175 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும் போது இது ஒரு பிளஸ் ஆகும்) ஆகியவைகளை வழங்குகின்றன.
ரூ.329-ஐ பொறுத்தவரை, இதன்கீழ் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-கள் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் ஜியோ சாவன் ப்ரோ (JioSaavn Pro), ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய சந்தாக்களும் இலவசமாக கிடைக்கும்.
ரூ.1029-ஐ பொறுத்தவரை, இதன்கீழ் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தம் 168ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-கள் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் அமேசான் ப்ரைம் லைட் (Amazon Prime Lite), ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய சந்தாக்களும் இலவசமாக கிடைக்கும்.
ரூ.1049-ஐ பொறுத்தவரை, ரூ.1029-ஐ போலவே இதுவும் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தம் 168ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அமேசான் ப்ரைம் லைட் சந்தாவிற்கு பதிலாக சோனி லைவ் மற்றும் ஜீ5-ஐ வழங்குகிறது. மேற்கண்ட 3 திட்டங்களும் கூட மை ஜியோ ஆப் மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பொழுதுபோக்குப் பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








