ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு வாய்ஸ்.. மாத செலவு ரூ.300 போதும்.. 90 நாட்களுக்கு ஓடிடி.. 912 ஜிபி டேட்டா வருது
ஜியோ கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) சலுகைகளை கொடுத்த திட்டத்தில் இப்போது, 90 நாட்களுக்கு இலவச ஓடிடி சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை மாதத்துக்கு ரூ.300 செலவில் கொடுப்பதால், விலைக்கு ஏற்ப சலுகைகளை எதிர்பார்க்க முடிகிறது. இந்த ஜியோ வருடாந்திர திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் விலை ரூ.3,599 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் அதாவது 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இதை ஒரு மாதத்துக்கு கணக்கிட்டால், ரூ.300-க்கு சலுகைகளை கொடுக்கிறது. இதே சலுகைகளுடன் மாதாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறதா என்றால், கிடையாது. வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே மாதத்துக்கு ஆகும் செலவு குறையும்.

ஜியோ ரூ 3599 வருடாந்திர திட்டம் ஆஃபர் (Jio Rs 3599 Annual Plan Offers): இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) வருடம் முழுவதும் கிடைக்கும். மற்ற சலுகைகளுக்கு லிமிட் இருக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. ஆகவே, 365 நாட்களுக்கு மொத்தமாக 912 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (Jio TV) ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது.
மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் வருகிறது. இந்த கிளவுட் சலுகை மூலம் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். இதை பெறுவதற்கு உங்களது ஜியோ நம்பருடன் இணைக்கப்பட்ட ஜிமெயில் ஐடி தேவைப்படும். இந்த சலுகைகள் மட்டுமே முன்னதாக கிடைத்து வந்தன. ஆனால், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா இணைந்த பிறகு இது மாற்றப்பட்டது.
அதாவது, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆப்கள் இணைந்த பிறகு கஸ்டமர்களிடையே இதை கொண்டு சேர்க்க ரூ.299 விலைக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டது. ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்துக்கும் முதல் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
இந்த சலுகைகளையே ஜியோ ரூ 3599 வருடாந்திர திட்டம் கொடுக்கிறது. இதுவே மாதாந்திர வேலிடிட்டி கொடுக்கும் ஜியோ ரூ.299 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல இந்த திட்டத்துக்கும் 90 நாட்கள் சந்தா கொண்ட ஜியோஹாட்ஸ்டார் சலுகை வரும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. ஆகவே, மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, குறைவான சலுகைகளே அந்த விலைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








