ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய கடைசி வாய்ப்பு.. இதற்கு மேல் போனால் கட்டணம்.. விட்றாதீங்க..
அனைத்து அரசு திட்டங்களுக்கும் மற்றும் பிற சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதை அப்டேட் செய்வது கட்டாயம் ஆகும். அதேபோல் நாடு முழுவதும் அடையாளத்திற்காகவும், முகவரிக்கான சான்றாகவும் ஆதார் எண் செயல்படுகிறது.
குறிப்பாக ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பயோமெட்ரிக் தரவு மற்றும் பிற தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஆதார் அட்டையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட நமக்குக் கிடைக்க வேண்டிய அரசின் சில திட்டங்களைப் பறித்துவிடும்.

இந்நிலையில் உங்களது ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் (புதுப்பிக்க) செய்ய விரும்பினால், வரும் ஜூன் 14 வரை அதற்கான அவகாசத்தை அரசு வழங்கி உள்ளது. குறிப்பாக ஜூன் 14 வரை UIDAI எனும் இணையதளத்திற்குச் சென்று உங்களது ஆதார் அட்டையில் உள்ள ஆதார் தகவல்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் அதை இப்போதே செலவின்றி செய்யலாம். சரி இப்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
முதலில் நீங்கள் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை ஆதார் (my aadhaar) என்பதை கிளிக் செய்த பின்பு கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.
அதில் உள்ள சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
மேலும் இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்பிக்க வேண்டும். அதாவது அங்கு வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும். மேலும் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் கண்காணிக்க முடியும்.
குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை (Aadhaar card) பெற்ற தனிநபர்கள் தங்கள் அடையாளச் சான்று(POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








