என்னப்பா இதெல்லாம்: அலெக்சாவிடம் தினசரி 19,000 முறை இதைதான் சொல்லிருக்காங்க!

|

அலெக்சா இந்தியாவில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஒரு தினத்துக்கு சுமார் 19,000 முறைகள் அலெக்சா ஐ லவ் யூ என பயனர்கள் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

அலெக்சா இந்தியா

அலெக்சா இந்தியா

அலெக்சா இந்தியாவில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அலெக்சா அசிஸ்டென்ட் தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் ஹிங்கிலிஷ்(இந்தி ஆங்கிலம் கலவை) ஆகிய மொழிகளில் தொடர்பு கொண்டு அணுகலாம்.

அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்

அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்

அமேசான் இந்தியா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் இந்தியா அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்டை அறிமுகம் செய்தது. அலெக்சா அசிஸ்டென்ட் தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் ஹிங்கிலீஷ் (இந்தி ஆங்கிலம் கலவை) ஆகிய மொழிகளில் தொடர்பு கொண்டு பேசலாம்.

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்

அமேசான் அலெக்சா இந்தியாவில் தொடங்கி மூன்றாவது ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமேசான் எக்கோ ஸ்பீக்கர்களின் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

67 சதவீதம் அதிகரிப்பு

67 சதவீதம் அதிகரிப்பு

மேலும் 2019 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது அலெக்சாவின் பயன்பாடு 2020 ஆம் ஆண்டில் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது. அலாரம் வைத்துக் கொள்வது, இசை வாசிப்பது, ஸ்மார்ட் விளக்குகள் மற்றும் சாதனங்களை கட்டுபடுத்துவது ஆகிய அம்சங்கள் உள்ளது.

WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?

சிறப்பான கவர்ச்சிகரமான சலுகைகள்

சிறப்பான கவர்ச்சிகரமான சலுகைகள்

கிரிக்கெட் ஸ்கோர் நிகழ்நேர தகவல், பிரேக்கிங் செய்திகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக அறிந்து கொள்வதற்கு அலெக்சாவை தொடர்பு கொள்ளலாம். இந்தநிலையில் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக அலெக்சா ஸ்பீக்கர்களை வாங்க புதிய நடவடிக்கையாக பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் மெட்ரோ இல்லாத நகரங்களிலும் அலெக்சா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது நாட்டின் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க உதவியாக இருந்ததே என்றே கூறலாம்.

அலெக்சா ஐ லவ் யூ வார்த்தை

அலெக்சா ஐ லவ் யூ வார்த்தை

இதில் குறிப்பாக அமேசான் அலெக்சா வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது. மேலும் அலெக்சாவில் அதிகமுறை பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து பார்க்கையில், ஒரு நாளைக்கு சுமார் 19,000 முறைகள் அலெக்சா ஐ லவ் யூ எனவும் தினமும் 6000 முறை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
This is what the Indians often talked to Alexa Digital Voice Assistant

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X