கூகுளின் அடுத்த தலைவர் இதை பண்ணனும்.. வைரலாகும் சுந்தர் பிச்சையின் பேச்சு.. இதோ முழு விவரம்..
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) பேசிய பேச்சு வைரலாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் கூகுள் சிஇஒ கூகுள் சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். குறிப்பாக கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அடுத்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு கருத்து தெரிவித்தார். அதாவது அடுத்த தலைமை நிர்வாக அதிக கூகுள் நிறுவனத்தின் செல்வாக்கால் வரும் சக்தி மற்றும் பொறுப்பை உண்மையிலேயே புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்.

அதேபோல் கூகுளின் கருவிகள், அதன் புதிய அப்டேட்கள் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்யும் தலைவராக இருக்க வேண்டும். குறிப்பாக கூகுள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வடிவமைப்பதில் AI பங்கு அளப்பரியது. மேலும் கூகுள் நிறுவனத்தில் அடுத்த தலைமை அதிகாரியாக யார் பொறுப்பேற்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு ஏஐ துணை இருக்கும்.
அதேசமயம் ஏஐ ஆனது மனித வேலைகளை எடுத்துக் கொள்ளும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை. வேலையின் ஒவ்வொரு பகுதிகளையும் ஏஐ கவனித்துக்கொள்வதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன். மேலும் கூகுள் நிறுவனம் 2026 வரை இன்னும் அதிகமான இன்ஜினீயர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
சென்னையில் வறட்சியின் போது எங்களுக்குக் குழாய் தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமம். அதனால் நாங்கள் லாரிகளில் தண்ணீரைப் பெறமுடிந்தது. ஒரு வீட்டிற்கு எட்டு வாளிகள் கிடைக்கும். நானும் என் சகோதரனும் சில சமயங்களில் என் அம்மாவும், வரிசையில் காத்திருந்து அதைப் பெறுவோம். இதுபோன்ற அனுபவங்கள்தான் தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்த உருவாக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்து என்று பேசினார் சுந்தர் பிச்சை. ஆனால் இந்த உரையின்போது சுந்தர் பிச்சை எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. பதவி விலகப் போவதாகவோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், 2025-ல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி (Gemini) ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு என்று கூறினார் சுந்தர் பிச்சை.
அதுவும் கடந்த சில மாதங்களாகப் பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும் 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதுதவிர ஜெமினியை 500 மில்லியன் பயனர்கள் கொண்ட நுகர்வோர் தளமாக மாற்றுவது கூகுளின் மிக லட்சிய இலக்குகளில் ஒன்று. அதுவும் வரலாற்றில் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டு முதல் தரமான பொருளை உருவாக்க வேண்டும். அது இந்த ஆண்டு நிறைவேறும் என்று நம்புகிறேன் என பணியாளர்களிடம் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications