பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!

|

கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் பற்றி மிகவும் புரிந்துகொள்ள முடியாத மர்ம முடிச்சுகளெல்லாம், கடந்த சில ஆண்டுகளாக மெல்லமெல்ல அவிழ்ந்து கொண்டிருக்கின்றன, அதுவும் குறிப்பாக ஈர்ப்பு அலைகள் (gravitational waves) பற்றிய புரிதல்கள் பிறந்த பிறகு பிளாக்ஹோல் பற்றிய தெளிவுகள் அதிகம் கிடைக்கப்பெற்று கொண்டிருக்கின்றன எனலாம்.

அதற்கு சிறந்த எடுத்துக்கட்டாக, விண்வெளியில் உள்ள சிறிய அளவிலான பிளாக் ஹோல்களை எப்படி மின் ஆதார நிலையமாக மாற்ற முடியும் என்ற ஸ்டீபன் ஹோக்கிங்-ன் சமீபத்திய கோட்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிளாக்ஹோல்கள் ஆக்க சக்தி மட்டுமில்லை அழிவு சக்தியும் கூடத்தான் என்பதை எந்தவொரு வானவியல் மற்றும் அண்டவியல் அறிஞர்களும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

அப்படியாக, பிளாக்ஹோல் ஆனது, பிற அருகாமை நட்சத்திரங்களை ஈர்த்து விழுங்குவது போல் நாம் வாழும் பூமி கிரகத்தையும் விழுங்கினால் அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் என்ற அறிவியலார்களின் விளக்கமே இந்த தொகுப்பு..!

3 பண்புகள் :

3 பண்புகள் :

பிளாக் ஹோல் பற்றிய வெளிப்புற புரிதல்கள் இருந்தாலும் கூட, அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது மர்மம் தான் இருப்பினும், வெளிப்புற ஆய்வுகளில் இருந்து புரிந்துகொள்ளப்பட்ட பெருந்திரள் (Mass), சுழற்ச்சி (Spin) மற்றும் மின்னேற்றம் (Electric Charge) ஆகிய மூன்று பிளாக்ஹோல் பண்புகள் மூலம் சில கணிப்புகளை நிகழ்த்த முடிகிறது.

விளைவு 01 :

விளைவு 01 :

ஒருவேளை பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் 3 விளைவுகளை எதிர்நோக்கலாம். அப்படியாக, முதல் விளைவை - ஸ்பேகட்டிபிக்கேஷன் (Spaghettification) என்கிறார்கள் அறிவியல் விஞ்ஞானிகள்.

நூடூல்ஸ் எஃபெக்ட் :

நூடூல்ஸ் எஃபெக்ட் :

அதாவது, பிளாக்ஹோலை மிக நெருங்கும் பொருள் ஆனது நீட்டித்து விரிவடையும் (அதாவது சூடு நீரில் போட்ட நூடூல்ஸ் போல விரியும்). இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவானதை நூடூல்ஸ் எஃபெக்ட் (Noodle Effect) என்றும் அழைக்கப்படுகிறது என்பதும், 'ஸ்பேகட்டி' (spaghetti) என்பது ஒரு பாஸ்டா வகையின் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழிந்து இறக்க நேரிடும் :

கிழிந்து இறக்க நேரிடும் :

பூமி கிரகத்தில் இருக்கும் உயிர் இனங்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள் விரிவடையும் தன்மை (அதாவது எலாஸ்டிக் (Elastic) தன்மை) கொண்டவைகள் அல்ல. ஆகையால், பிளாக் ஹோலுக்குள்ளே அல்லது பிளாக் ஹோலுக்கு மிக நெருக்கமாக பூமி சென்றால் உலகில் உள்ள மனிதர்கள் விரிந்து கிழிந்து இறக்க நேரிடும் என்கிறது இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவின் விளக்கம்.

விளைவு 02 :

விளைவு 02 :

பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் - முப்பரிமாண இருப்பை (Holographic Existence) உணரும் என்கிறது ஒரு அறிவியல் கோட்பாடு. அதாவது பூமி கிரகம் தன்னை தானே ஒரு நிறைவில்லாத பிரதியை (Imperfect copy) எடுத்துக்கொண்டு ஒரு வகையான மூப்பரிமான காட்சியை அளிக்குமே தவிர அழிந்து போகாது என்கிறது இந்த கோட்பாடு.

கோட்பாடுகள் :

கோட்பாடுகள் :

இந்த கோட்பாடானது இரண்டு எதிரெதிர் கோட்பாடான ஃபூஸ்பால் (Fuzzbaal) மற்றும் ஃபையர்வால்ஸ் (Firewalls) ஆகிய இரண்டுக்குமே எதிர் கருத்தை முன் வைக்கும் ஒரு கோட்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபூஸ்பால் - ஃபையர்வால்ஸ் கோட்பாடு :

ஃபூஸ்பால் - ஃபையர்வால்ஸ் கோட்பாடு :

ஃபூஸ்பால் கோட்பாடு ஆனது பிளாக் ஹோல் எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது என்கிறது. ஃபையர்வால்ஸ் கோட்பாடோ, பிளாக் ஹோல் எல்லையை தொடும் எந்தவொரு பொருளும் அழிந்து போகும் என்கிறது.

விளைவு 03 :

விளைவு 03 :

பிளாக் ஹோல் ஆனது தன்னை நெருங்கும் எந்தவொரு புதிய பொருள் மீதும் அதிகப்படியான கதிர்வீச்சை (Radiation) வெளிப்படுத்தும் பண்பை கொண்டது. அப்படியாக, பிளாக் ஹோல் மூலம் ஈர்க்கப்பட்டு ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு ஏற்பட்டு விரிவடைந்து கிழிவதற்கு முன்னே அதீத கதிர்வீச்சால் முழு கிரகமும் வருத்தெடுக்கப்படலாம்.

மேலும் பல புரிதல்களுக்கு :

மேலும் பல புரிதல்களுக்கு :

பிளாக் ஹோல் பற்றிய மேலும் பல புரிதல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் : பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையின் மர்மங்கள்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'இந்த திட்டம்' பூமியை காப்பாற்றுமா இல்லை, காலி செய்யுமா..?!


உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : நாசா

Best Mobiles in India

English summary
This Is What Happens If Earth Falls Into A Black Hole. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X