Home
News

இந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா?:அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட்.!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருநாடுகளுக்கும் அணு ஆயுத போர் நடந்தால், என்ன ஆகும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அணு ஆயுத போர் நடந்தா என்ன ஆகும்?

அணு ஆயுத போர் நடந்தா என்ன ஆகும்?

அமெரிக்கா ஆய்வாளர்கள் வெளியிட்டு அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நடந்தால், 2ம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை விட உயிரிழப்பவர் அதிகமாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளது. சொல்லப்போனால், 5 கோடி முதல் 12.5 கோடி வரையிலான மக்கள் கொல்லப்படுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் அணு குண்டு எண்ணிக்கை

இரு நாடுகளின் அணு குண்டு எண்ணிக்கை

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒவ்வொன்றும் சுமார் 150 அணு ஆயுதங்களை வைத்துள்ளன. மேலும், 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

போரில் இறப்பு சதவீதம்

போரில் இறப்பு சதவீதம்

இந்தியா-பாகிஸ்தான் போர் உலகில் சாதரண இறப்பு விகிதத்தைக்காட்டிலும், இரட்டிப்பாகக் கூடும். இது உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு போராக இருக்கும் என்று ஆய்வு பணியில் ஈடுபட்ட ஒருவரான கொலராடோ போல்டர் பல்கலைக்கழக பேராசிரியர் பிரையன் டூன் கூறியுள்ளார்.

 2025ம் ஆண்டில் ஆயுதங்கள்

2025ம் ஆண்டில் ஆயுதங்கள்

2025ம் ஆண்டில் இரு நாடுகளிடமும் 400 முதல் 500 ஆயுதங்கள் இருக்கும் இரு நாடுகளிடையே போர் மேகம் சூளும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

கார்பன்துகள்  உலகம் முழுக்க பரவும்:

கார்பன்துகள் உலகம் முழுக்க பரவும்:

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்து, அணு ஆயுதங்கள் வெடித்தால், ஏற்படும் கரிப்புகை மற்றும் புகையில் உள்ள கார்பன் துகள்கள் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பிக்கும். இது வளிமண்டலத்தை கடுமையாக பாதித்து 15-30% மழை பெய்யும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுக்க அச்சம்:

உலகம் முழுக்க அச்சம்:

இந்தியா பாகிஸ்தானுக்கும் அணு ஆயுத போர் நடந்தால், உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும். உலகில் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

உலகிற்கு ஏற்படும் பாதிப்புகள்

உலகிற்கு ஏற்படும் பாதிப்புகள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நிகழ்ந்தால் நேரடி விளைவாக 5 முதல் 12.5 கோடி மக்கள் இறக்கக்கூடும். மேலும் வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு விதமான பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்படும் என மற்றொரு ஆய்வாளர் ஆலன் ரோபோக் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
This is the US Shock Report in case of a nuclear war for Pakistan in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X