Home
News

இனி ஆட்டமே வேற.. ANDROID 14 அப்டேட்.. இந்த நோக்கியா போனுக்கு தான் முதலில் கிடைக்கும்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய இயங்குதளம் தற்போது சில போன்களுக்கு மட்டுமே கிடைக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் இருக்கிறது.

அதாவது போட்டோ பிக்கர் ( Photo picker), தீம் ஆப் ஐகான்கள் (themed app icons ), மொழி விருப்பத்தேர்வுகள் ( language preferences), லாக் ஸ்கிரீன் அம்சங்கள், நோட்டிபிகேஷன் ஃப்ளாஷ்கள் (Notification Flashes) , கேமரா மற்றும் பேட்டரி ஆயுள் மேம்பாடுகள் உள்ளிட்ட பல புதிய வசதிகளுடன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது சில நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13-ல் இயங்குகின்றன.

 ANDROID 14 அப்டேட்.. இந்த நோக்கியா போனுக்கு தான் முதலில் கிடைக்கும்..

ஆனால் இந்த நோக்கியா போன்கள் விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் பெற இருக்கின்றன. சரி இப்போது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைப் பெறும் முதல் நோக்கியா போன் எது? என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அதாவது நோக்கியா எஸ்ஆர்21 (Nokia XR21), நோக்கியா எக்ஸ்30 (Nokia X30), நோக்கியா ஜி60 5ஜி (Nokia G60 5G), நோக்கியா ஜி22 (Nokia G22) அல்லது நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போன்றவற்றில் எது முதலில் ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் என்பது பலரின் கேள்வியாக இருக்கும்.

ஆனால் தற்போது Geekbench தளத்தில் வெளியான தகவலின்படி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைச் சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்ட்ராய்டு 14 இயங்குதள அப்டேட் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் முதலில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 ANDROID 14 அப்டேட்.. இந்த நோக்கியா போனுக்கு தான் முதலில் கிடைக்கும்..

ஆனாலும் இந்த நோக்கியா ஜி42 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் நோக்கியா ஜி42ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் பெறும் என்று தகவல் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்போன்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.

 ANDROID 14 அப்டேட்.. இந்த நோக்கியா போனுக்கு தான் முதலில் கிடைக்கும்..

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். 20W சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

Best Mobiles in India

English summary
This is the first Nokia device to get ANDROID 14: Information leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X