தாண்டவம் ஆடிய பிரிட்டனின் 'ராஃப் ட்ரோன்'..!
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரின் பதுங்கு இடங்களை (Safehouse) குறி வைத்து, பிரிட்டன் தனது 'ராஃப் ட்ரோன்' (RAF Drone) மூலம் நடத்திய தாக்குதல் சார்ந்த புகைப்படங்கள்/ வீடியோ தற்போது வெளியாகியுள்ளன.
மொத்தம் 6 நாட்கள் நடைப்பெற்ற இந்த பிரிட்டன் நாட்டின் ராஃப் (RAF) ட்ரோன் தாக்குதலில், மொத்தம் 13 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகின் அதிநவீன ட்ரோன்களில் ஒன்றான ராஃப் நடத்திய தாக்குதலின் தொழில்நுட்ப முறைகளும், கடைசி நிமிடங்களும் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

உளவு :
முதலில் பிரிட்டன் நாட்டின் உளவு விமானங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஸேஃப்ஹவுஸ் ஒன்று கண்டுப்பிடிக்கப்ப்பட்டுள்ளது.

அதிநவீன ஏவுகணை :
பின் ராஃப் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பிரிம்ஸ்டோன் ஏவுகணையானது (Brimstone) உலகின் அதிநவீன ஏவுகணைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிம்ஸ்டோன் :
5 அடி 10 இன்ச் நீளம் கொண்ட பிரிம்ஸ்டோன் ஏவுகணையானது, 7 மைல் தொலைவில் இருந்தாலும் கூட துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடார் மற்றும் லேசார் லோக்கேட்டர் :
சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரிம்ஸ்டோன்னில் கைடன்ஸ் ஃபின்ஸ் (Guidance fins) மற்றும் ஹை-டேபீனிஷன் ரேடார் மற்றும் லேசார் லோக்கேட்டர் (high Definition Radar and Laser Locator) உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு :
அது மட்டுமின்றி பிரிம்ஸ்டோன் ஏவுகணையானது குறி வைக்கபட்ட இடத்தை துல்லியமாகவும், அதை சுற்றி உள்ள இடத்தை பெரும்பாலும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது என்பதும், இதன் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துல்லியம் :
பிரிம்ஸ்டோன் ஏவுகணை ஒன்று, மணிக்கு 70 மீட்டர் வேகத்தில் செல்லும் தீவிரவாதிகளின் கார் ஒன்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் சில நொடிக்களுக்கு முன்பு பதிவான காட்சி.

குறி :
ஈராக்கில் உள்ள தீவிரவாத ஸேஃப் ஹவுஸை ராஃப் ட்ரோன் குறி வைத்த போது..!

தாக்குதல் :
ராஃப் ட்ரோன் பிரிம் ஸ்டோன் ஏவுகணை மூலம் குறி வைத்த இடத்தை தாக்கி அழித்த போது பதிவான காட்சி..!

அழிவு :
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத பதுங்கு இடம் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்ட பின் பதிவான காட்சி..!

கட்டுப்பாடு :
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ராஃப் ட்ரோன் (பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ளது)

பாவ்வே லேசர் ஏவுகணை :
ட்ரோன் மூலம் மட்டுமின்றி பிரிட்டன் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டன, அவ்வாறான ஒரு தாக்குதல்களுக்காக விமானத்தில் இணைக்கப்படும் பாவ்வே லேசர் ஏவுகணை (Paveway IV laser-guided missile)
வீடியோ :
ராஃப் ட்ரோன் தீவிரவாத பதுங்கு இடத்தை குறி வைத்து தாக்கி அழித்த காட்சி.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications