Just In
- 11 hrs ago
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- 13 hrs ago
இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!
- 14 hrs ago
அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..
- 14 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்...
- News
பிளாஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்.. பரிதவித்த மாணவர்கள்.. ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை
- Movies
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த ‘விக்ரம்’ புரமோஷன்!
- Automobiles
போலீஸ் திடீர் அதிரடி... ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... ஏன் தெரியுமா?
- Finance
மொபைல் கேமிங் சந்தை இந்த ஆண்டு இத்தனை பில்லியனை தாண்டுமா?
- Sports
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாசா வீரர்கள் விண்வெளியில் இப்படி தான் முடி வெட்டுகிறார்களா? வீடியோவை வெளியிட்ட இந்திய வம்சாவளி வீரர்.!
இப்போது சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் 7 அஸ்ட்ரோனாட்ஸ் மற்றும் காஸ்மோனாட்ஸ் உடன் செயல்பாட்டில் உள்ளது. பூமியில் நாம் செய்யும் வேலைகளையே கடினமானது என்று கருதுகிறோம். ஆனால், விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் அவர்கள் அன்றாடம் செய்யும் எளிய வேலைகளை முடிக்கவே அவ்வளவு சிரமம் பட வேண்டியதுள்ளது. உதாரணத்திற்கு, தினமும் பல் துலக்குவது, குளிப்பது, கழிப்பறைக்குச் செல்வது என்று நாம் பூமியில் எளிதாகச் செய்யும் வேலைகளை இவர்கள் பக்குவத்துடன் செய்ய வேண்டியதுள்ளது.

பூமியில் எளிமையாகச் செய்த விஷயங்களை விண்வெளியில் செய்வது சிரமமா?
இப்படி எல்லாவற்றிற்கும் சிரமப்படும் விண்வெளி வீரர்களின் சிக்கலான விண்வெளி வாழ்க்கையை அவ்வப்போது விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பூமி வாசிகளுடன் அவர்களின் வினோதமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக விண்வெளியில் ஏன் எளிமையாகச் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைக் கூட பக்குவமாகப் பார்த்து-பார்த்துச் செய்ய வேண்டிய சில விதிமுறைகளுடன் ஏன் பின்பற்றப்படுகிறது என்ற புரிதலையும் மக்களுக்கு வீரர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு எப்படி சிகை அலங்காரம் செய்யப்படுகிறது தெரியுமா?
குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பெண் வீரர் ஒருவர், விண்வெளியில் எப்படி விண்வெளி வீரர்கள் ஷாம்பு பயன்படுத்திக் குளிக்கிறார்கள் என்ற வீடியோவை பதிவிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தார் என்பதை நாம் மறக்க முடியாது. அதேபோல், இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர், எப்படி விண்வெளியில் வீரர்களுக்குச் சிகை அலங்காரம் செய்யப்படுகிறது என்ற வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

அஸ்ட்ரோனாட் என்றால் என்ன? காஸ்மோனாட் என்றால் என்ன?
ஒரு அஸ்ட்ரோனாட் மற்றொரு காஸ்மோனாட்டிற்கு சிகை அலங்காரம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தெரியாதவர்களுக்கு, அஸ்ட்ரோனாட் என்றால் NASA, ESA, CSA, அல்லது JAXA மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற விண்வெளி வீரர் என்பது பொருளாகும். அதேபோல், காஸ்மோனாட் என்பது விண்வெளியில் பணிபுரிய ரஷ்ய விண்வெளி ஏஜென்சியால் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் என்பது பொருளாகும். ஆனால், இருவரின் வேலையும் விண்வெளியில் தான் அமைக்கப்படுகிறது என்பது பொதுவானது.

விண்வெளியில் உள்ள நுண் புவியீர்ப்பில் முடி வெட்டினால் என்னவாகும் தெரியுமா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு முடி வெட்டுவது என்பது மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று, காரணம் விண்வெளியில் வீரர்கள் இருக்கும் போது அவர்களின் தலையில் உள்ள முடிகள் அனைத்தும் நுண் புவியீர்ப்பு காரணமாக மேல் நோக்கி நிற்கத் துவங்கிவிடும். நுண் புவியீர்ப்பில் முடியை வெட்டி எடுக்கும் போது அவை அங்கும் இங்கும் காற்றில் மிதக்கக்கூடும். இது அங்கு வசிக்கும் மற்ற வீரர்களுக்கும், இயந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்பதனால், மிகவும் பிரத்தியேகமான டிரிம்மரை கொண்டு தான் வீரர்கள் சிகை அலங்காரத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த பிரத்தியேக டிரிம்மர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
இந்த பிரத்தியேக டிரிம்மர், வெறும் டிரிம்மர் சாதனமாக மட்டும் இல்லாமல் ஒரு வாக்யூம் கிளீனராகவும் செயல்படுகிறது. ஆம், இந்த டிரிம்மரை வீரர்கள் பயன்படுத்தி முடியை வெட்டும் போது, ஒரு சிறிய முடி கூட காற்றில் சிதறாமல் இதில் உள்ள வாக்யூம் அதை உறிஞ்சி உள்ளிழுக்கிறது. இந்த சாதனத்தைப் பயன்படுத்தியே வீரர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி சிகை அலங்காரங்களைச் செய்துகொள்கின்றனர். இந்த டிரிம்மரில் உள்ள இதே செயல்பாடு கொள்கை தான் விண்வெளி கழிப்பறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
சிகை அலங்காரம் செய்யும் வீடியோவில் என்ன கோரப்பட்டுள்ளது?
இது தொடர்பான வீடியோவை பதிவிட்ட விண்வெளி வீரர் மத்தியாஸ் மவூரர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தது, "உங்களுக்குச் சிகை அலங்காரம் செய்ய வேண்டுமா, அப்படியானால் உடனே சர்வதேச விண்வெளி நிலையம் வாருங்கள். இங்கு இருக்கும் ராஜா சாரி பல திறமைகளைக் கொண்டவர். நம் கண்களில் முடி உதிர்வதை யாரும் விரும்பமாட்டோம், அதேபோல் விண்வெளி நிலையத்தில் இதைப் பறக்கவிட முடியாது. இதனால், வாக்யூம் உடன் கூடிய டிரிம்மரை பயன்படுத்தி நேர்த்தியாக எண்களின் ஸ்டைலிஸ்ட சாரி எங்களை அலங்கரித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..

யார் இந்த மத்தியாஸ் மவூரர் மற்றும் ராஜா சாரி?
ISS இல் இருக்கும் மத்தியாஸ் மவூரர் ESA - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், ராஜா சாரி என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஆர்ட்டெமிஸ் மிஷனின் ஒரு பகுதியாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ராஜா சாரி இதற்கு முன்னர், அமெரிக்க விமானப்படையில் கர்னலாக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஸ்மிக் கிஸ் விண்வெளி திட்டம் எதற்கானது?
வீடியோவில் உள்ள இரண்டு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகனில் தொடர்ந்து ஆறு மாத காலங்கள் தங்கி இருப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. அதேபோல், மவூரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த விண்வெளி வீரர் 'காஸ்மிக் கிஸ்' விண்வெளி திட்டத்தின் கீழ் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியானது 35 ஐரோப்பியச் சோதனைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் அவர்களின் தலை முடியை எப்படி சுத்தம் செய்கிறார்கள் தெரியுமா?
இது ஒரு புறம் இருக்க, விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எப்படிக் குளிப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த பதிவுடன் லிங்க் செய்யப்பட்டுள்ள அந்த பதிவையும் கிளிக் செய்து படியுங்கள். விண்வெளியில் ஷாம்பு பயன்படுத்தி எப்படி பெண் விண்வெளி வீரர் தனது தலை முடிகளைச் சுத்தம் செய்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். விண்வெளி வீரர்களின் குளியல் கூட, விண்வெளி நிலையத்தில் என்னென்ன வினோதமான வழிமுறையுடன் பின்பற்றப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999