'பின்' மூலம் தொழில்நுட்பத்தை இயக்குங்கள்
தொழில்நுட்பத்தில் ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளை மறந்து விடுங்கள் இந்த இந்தியரின் தொழில்நுட்பம் மிக பெரிதாக கருதப்படுகிறது. இதன் பெயர் பின், பார்க்க மோதிரம் போன்று காட்சியளிக்கும் பின் தொழில்நுட்பத்தையே உங்கள் கைகளில் அடக்கி விடும்.

பின் என்றால் என்ன
பின் ஒரு சிறிய வன்பொருள்.இதை உங்கள் கட்டை விரலில் அனிந்து கொண்டால் உங்கள் உள்ளங்கை சைகை இடைமுகமாக மாறிவிடும். ப்ளூடூத் மூலம் இது இயங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் போன், டி.வி, வீட்டு உபயோக பொருட்கள் என பல சாதனங்களை இயக்க முடியும்.பின் உங்கள் கையில் இருந்தால் அனைத்து தொழில்நுட்பங்களையும் நீங்கள் உங்கள் கைகளை கொண்டே இயக்க முடியும்.

பின் கட்டமைப்பு
இதன்படி நீங்கள் உங்கள் விரல்களின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு செயல்களை நிறைவேற்ற கட்டமைத்து கொள்ள முடியும். இந்த கட்டமைப்பு உங்கள் விரல்களை பட்டன்களை போல் பயன்படுத்த வைக்கும். இது மட்டுமில்லாமல் பார்வையற்றவர்களும் பின் பயன்படுத்தி தொழில்நுட்பங்களை உபயோகிக்க முடியும் என்பதோடு வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் என்பதால் மோதிரம் போன்று இதை நீங்கள் உபயோகிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications