இந்தியாவின் சிறந்த எதிகல் ஹேக்கர் இவர் தான் : பேஸ்புக், கூகுள் புகழாரம்!

பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து மார்ச் 30ஆம் தேதி சிங்கப்பூரில் சைபர்சைக்யூரிடி கருத்தரங்கை நடத்தின.

|

பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து மார்ச் 30ஆம் தேதி சிங்கப்பூரில் சைபர்சைக்யூரிடி கருத்தரங்கை நடத்தின. உலகம் முழுவதும் உள்ள பிரபல நெறிமுறை கொண்ட ஹேக்கர்கள் (ஒயிட் ஹேட் ஹேக்கர்கள்) மற்றும் இணைய பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிபவர்கள்( பக் பவுண்டி ஹண்டர்கள்) தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். அவர்கள் தங்களது பிரத்தியேக கூட்டத்திற்கு ஒரு இந்திய மாணவரையும் அழைத்திருந்தனர்.

இந்தியாவின் சிறந்த எதிகல் ஹேக்கர் : பேஸ்புக், கூகுள் புகழாரம்!

ரோஹித் குமார் என்ற அந்த மாணவர் லவ்லி ப்ரெப்ஸ்னல் பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-ல் 2 ஆண்டு பி.சி.ஏ. ஹானர்ஸ் படிக்கிறார். இவரது கோடிங் திறமையை அங்கீகரித்துள்ள இந்த இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், அவரை இரண்டு நாள் 'பவுண்டிகான்'(Bountycon) கருத்தரங்கிற்கு அழைத்துள்ளன.

பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்தவர்

பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்தவர்

இந்த கருத்தரங்கிற்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து அழைக்கப்பட்ட வெகுசில பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களில் ரோஹித் ஒருவராவார். இந்தியாவின் முன்னணி நெறிமுறை ஹேக்கர்களில் ஒருவராக கருதப்படும் இவர், 2018 ஆம் ஆண்டில் பெரும்பாலான அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ள மிகச் சிறந்த 20 பக் பவுண்டி ஹண்டர்களில் ஒருவராக பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்தவர்

அமெரிக்கா

அமெரிக்கா

பேஸ்புக்-ல் (அமெரிக்கா) செக்யூரிட்டி ப்ரோக்ராம் மேனேஜராக உள்ள ஜாச் டர்க் இடமிருந்து பவுண்டிகான்-ல் பங்கேற்குமாறு நேரடி அழைப்பை அவர் பெற்றார். கடந்த சில ஆண்டுகளில், ரோஹித் பேஸ்புக், இம்குர், இன்விஷன் மற்றும் ஷாபிபை ஆகியவற்றிலிருந்து பல பவுண்டிகளை பெற்றுள்ளதார்.

ஆய்வுகளை பகிர்ந்து கொள்ளுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

ஆய்வுகளை பகிர்ந்து கொள்ளுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

" ஆசியா-பசிபிக்கில் நடைபெறும் மிகப்பெரிய பாதுகாப்பு கருத்தரங்கில் பவுண்டிகான் 2019 ம் ஒன்று. அந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.மேலும் மற்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எனது ஆய்வுகளை பகிர்ந்து கொள்ளுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ரோஹித் கூறினார்.

 இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்

இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்

அவரது படிப்பு மற்றும் ஹேக்கிங் தவிர, ரோஹித் தற்போது இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அதில் ஒன்றான கோல்ட்பாக்ஸ், பிரபல முதலீட்டாளர் குழுவான YCombinator ஆல் துவங்கப்பட்டு ஐஓஎஸ் மற்றும் இயந்திர தீர்வுகளுக்கான மென்பொருள்களை உருவாக்கிவருகிறது.

பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

உண்மையில் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முற்றிலும் தங்களுக்கான சொந்த பாதுகாப்பு அணிகள் வைத்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு பாதுகாப்பு குறைபாடுகளையும் கண்டறிவர் என எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் இளம் ஹேக்கர்களின் திறமையை மேம்படுத்த ஊக்குவிக்கவும், அதே நேரத்தில் நம்முடைய டிஜிட்டல் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கவும் இது போன்ற பக் பவுண்டி நிகழ்ச்சிகள் மற்றும் பிற பாதுகாப்பு கருத்தரங்குகள் நடத்துகின்றன.

Best Mobiles in India

English summary
This Indian College Student Is India's Best Ethical Hacker, According To Facebook & Google: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X