வெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்! நீங்களும் கத்துக்கோங்க...

ஸ்மார்ட்வாட்சுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் மற்றும் மிகவும் குறைவான பயன்பாடுகளை கொண்ட அந்த இரண்டாம் திரையை(ஸ்மார்ட்வாட்ச்) வாங்குவதை நியாயப்படுத்துவதும் கடினம்.

|

ஸ்மார்ட்வாட்சுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் மற்றும் மிகவும் குறைவான பயன்பாடுகளை கொண்ட அந்த இரண்டாம் திரையை(ஸ்மார்ட்வாட்ச்) வாங்குவதை நியாயப்படுத்துவதும் கடினம். ஆனால் இந்த யோசனையின் நன்மைகளை கருத்தில்கொண்டு உங்களுக்காக நீங்களே ஒரு ஸ்மார்ட்வாட்சை உருவாக்கினால் என்ன? ஆம், இதைத்தான் ஒரு பொறியாளர் தனது ப்ராஜெக்ட்-ஐ செய்யும் போது நினைத்தார்.

வெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்! நீங்களும் கத்துக்கோங்க

smarchbme என்ற புனைப்பெயர் கொண்ட இளைஞரான சாம்சன் மார்ச், சமீபத்தில் தனது புதிய தயாரிப்பு பற்றி ரெட்டிட்-ல் பதிவிட்டிருந்தார். அவர் முழுமையான ஸ்மார்ட்வாட்சை தொடக்கத்தில் இருந்து உருவாக்கியுள்ளார். அது நம்பமுடியாததாக இல்லை எனினும், உண்மையில் அது சிறப்பான ஒன்று.

'Smarch Watch' என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்வாட்சை உருவாக்க ஒரு சில வாரங்களே ஆன நிலையில் அது முழுமையாக செயல்படுகிறது. அதன் கோடிங் பகுதியியை கூட தானே கவனித்துக்கொண்டார் மார்ச். இந்த சாதனம் ஏழு நாட்கள் செயல்படவல்ல ஒரு சுவாரஸ்யமான பேட்டரி ஆயுளை கொண்டிருக்கிறது, மேலும் அதனுடன் இருக்கும் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் ஆக வெறும் 2.5 மணி நேரங்களே எடுத்துக்கொள்கிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச், அவரது ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ், இமெயில் மற்றும் காலண்டர் போன்றவற்றிற்கு வெவ்வேறு வண்ண குறியீட்டு அறிவிப்புகளை காட்டுகிறது. தற்போது இதில் இல்லாத ஒரே முக்கிய அம்சம் பாடல்களை ப்ளே செய்யும் வசதி ஆகும்.

வெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்! நீங்களும் கத்துக்கோங்க

இதை உருவாக்குவதற்காக மலிவான-கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த முயற்சித்ததாக மார்ச் கூறுகிறார். இதை வடிவமைப்பதற்காக மொத்தமாக சுமார் 50 டாலர் அதாவது ரூ. 3,500 ரூபாயை செலவழித்திருக்கிறார். எனினும்" ஒரு விதியாக, இந்த சாதனத்தை வெற்றிகரமாகவும் இலாபகரமானதாகவும் மாற்ற , அதை தயாரிப்பு செலவிலிருந்து நான்கு அல்லது ஐந்து மடங்கு விலைக்கு விற்க வேண்டும்." என்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால், லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில் $ 200 முதல் $ 250 டாலர் விலை நிர்ணயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 13,800 முதல் ரூ. 17,300 ஆகும். இது சந்தையில் கிடைக்கும் சராசரியான ஸ்மார்ட்வாட்சை விட மிகவும் மலிவானதாகவே இருக்கிறது.

குறைந்தபட்சம் இந்த சிறு ப்ராஜெக்ட் ஏன் ஸ்மார்ட்வாட்ச்கள் எப்போதும் அதிக விலையில் இருக்கின்றன என்பதல ஹைலைட் செய்துள்ளது. துரதிருஷ்டவசமாக, மார்ச் தனது வடிவமைப்பை வணிகரீதியாக பெருமளவில் உற்பத்திசெய்யும் எண்ணம் இல்லை என்கிறார். இருப்பினும் தான் இந்த சாதனத்தை உருவாக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே நீங்கள் விரும்பினால் நீங்களாகவே உங்களுக்கான ஸ்மார்ட் ஸ்மார்ச் வாட்சை உருவாக்கலாம்.

வெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்! நீங்களும் கத்துக்கோங்க

இருப்பினும் அது ஒரு எளிதான பணி அல்ல என எச்சரிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றிய மார்ச், 3டி பிரிண்டர் போன்ற விஷயங்களை நன்கு புரிந்துவைத்துள்ளார். அவர் மற்ற DIY(Do it Yourself) பொழுதுபோக்கு வீரர்களுக்கு சில பொன்மொழிகளையும் கூறியுள்ளார்.


"நாம் தயாரிப்புகளுக்கான பொற்காலத்தில் வாழ்கிறோம். புதியவற்றை உருவாக்க தொடங்குவதற்கு இதைவிட நல்ல நேரம் இல்லை" என்று கூறும் மார்ச் "உன்னால் எதையும் செய்யமுடியும். அடுத்ததாக DIY விண்கலம்!!!!" என கூறுகிறார் நம்பிக்கையுடன்.

Best Mobiles in India

English summary
This Guy Built A Smartwatch From Scratch For Just Rs 3,500, Here's How You Can Too: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X