Home
News

கோல்டுக்கு கும்பிடு.. இனி ரூ.10-க்கு தங்கம்.. ஏழைக்கு ஏத்த டிஜிட்டல் கோல்டு.. வீட்டுக்கு டெலிவரியில் அம்பானி!

முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்ஸ் சர்வீசஸ் (Jio Financial Services) நிறுவனமானது, வெறும் ரூ.10-க்கு ஸ்மார்ட்கோல்டு (SmartGold) வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த தீபாவளிக்கு ஏழைய மக்களும் டிஜிட்டல் கோல்டு வாங்குவதை உறுதி செய்திருக்கிறது. இந்த தங்கத்தை வாங்குவது எப்படி? மற்றும் பிசிகல் கோல்டாக மாற்றுவது எப்படி?

இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும், ஆனால் பணம் அவ்வளவாக இல்லை என்றாலும், ஜியோ ஃபைனான்ஸ் சர்வீசஸ் மூலம் வெறும் ரூ.10 முதல் தங்கம் வாங்கி கொள்ள முடியும். அரை கிராம் மதிப்பில் டிஜிட்டலாக தங்கம் வாங்கிவிட்டால், அதை நீங்கள் எளிதாக பிசிகல் கோல்டாக மாற்றி கொள்ளவும் முடியும். இல்லையென்றால், பணமாகவும் மாற்றி கொள்ளலாம்.

கோல்டுக்கு கும்பிடு.. இனி ரூ.10-க்கு தங்கம்.. ஏழைக்கு ஏத்த டிஜிட்டல்!

ஆகவே, இந்த ஜியோ ஸ்மார்ட்கோல்டு (Jio SmartGold) முற்றிலும் டிஜிட்டலாக இருப்பதால், கஸ்டமர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் சிறிய தொகை மூலமும் தங்கத்தில் முதலீடு செய்வதை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்கோல்டு வாங்க விரும்பினால், இரண்டு முறைகளில் ஜியோ ஃபைனான்ஸ் சர்வீசஸ் வழங்குகிறது. முதலாவது எளிமையானது.

அதாவது, நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதை போல வீட்டில் இருந்தே 0.5 கிராம், 1 கிராம், 2 கிராம், 5 கிராம் அல்லது 10 கிராம் என்று ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த கோல்டு காயின்கள் உங்களது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இது மார்கெட் விலையில் கிடைக்கும். இரண்டாவது, ஏழைகளுக்கு ஏற்ப சிறிய தொகையில் இருந்து தொடங்குகிறது.

உங்களிடம் ரூ.10 இருந்தால் போதும், டிஜிட்டல் கோல்டு வாங்கலாம். இப்படி 0.5 கிராம் மதிப்பு வரும் வரையில் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது செலுத்தி கொள்ளலாம். அதன் பிறகு அந்த 0.5 கிராம் கோல்டு காயினை வழக்கம் போல டெலிவரி மூலம் பெற்று கொள்ளலாம் அல்லது அன்றைய நாளில் கோல்டு விற்பனையாகும் விலையில் பணமாகவும் மாற்றலாம்.

ஆகவே, வீட்டுக்கு தங்கம் வரவேண்டுமானால், குறைந்தது 0.5 கிராம் வரையில் சேர்க்க வேண்டும். காசு இருக்கும்போது ரூ.10 அல்லது ரூ.50 என்று தேவைக்கு ஏற்ப வாங்கி சேர்க்கலாம். இந்த ஜியோ SmartGold 24 காரட் தரத்தில் வாங்கப்பட்டு கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த கணக்கிலேயே தங்களது முதலீடுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

இந்த ஜியோ ஸ்மார்ட்கோல்டு வாங்குவது எப்படி? இந்த டிஜிட்டல் கோல்டை முகேஷ் அம்பானியின் வங்கி சாரா நிதி நிறுவனமான (என்பிஎஃப்சி) ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் விற்பனை செய்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (JioFinance App) மூலம் SmartGold-இல் கஸ்டமர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். அதேபோல கவனித்து கொள்ளலாம்.

இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் ரூ.10ஆக விலை இருப்பதால், அதிகளவில் மக்களிடையே வாங்கப்படலாம். இது பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், கோல்டு மீதான முதலீட்டையும் அதுதொடர்பான கஸ்டமர்களையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டிஜிட்டல் கோல்டு வாங்குவதன் மூலம் பிசிகல் கோல்டு வாங்கும்போது ஏற்படும் செய் கூலி, சேதாரம் போன்றவற்றை தவிர்க்கலாம். ஆனால், அதே நேரத்தில் முழு கிராமுக்கும் மார்கெட் தொகை எப்போது வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். ஆகவே, இதை பணமாக மாற்றுவது மிகவும் சுலபமானது. அதே நேரத்தில் பிசிகல் கோல்டைவிட லாபம் தரக்கூடியது.

இதேபோல கூகுள் பே, போன்பே போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்கள் மூலமும் டிஜிட்டல் கோல்டு வாங்கி கொள்ள முடியும். அதில் பின்பற்றப்படும் முறைகளிலேயே ஜியோ நிறுவனத்தின் ஸ்மார்ட்கோல்டு விற்பனையும் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், ரூ.10 முதல் தங்கம் கிடைப்பது கஸ்டமர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்று தந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Diwali Customers Can Buy Digital Gold at Jio Financial Services for Just Rs 10 Check SmartGold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X