Home
News

லைட் போன் - இதுல போன் மட்டும்தான் பேசலாம்..!

By Muthuraj

மொபைல் போன்களால் கெடும் வேலைகளும், ஏற்படும் கவனச் சிதைவுகளும் கொஞ்சம் நஞ்சமில்லை. ஒரு புத்தகமே எழுதலாம், அவ்ளோ இருக்கு..!

லைட் போன் - இதுல போன் மட்டும்தான் பேசலாம்..!

10 நிமிஷத்துக்கு ஒரு முறை மெஸேஜ் அனுப்பிட்டே இருக்கணும், தினம் 4 முறையாச்சும் போட்டோ எடுத்து போடணும், ஃபேஸ் புக்ல சாட், லைக், ஷேர் பண்ணனும், வாட்ஸ் ஆப்ல லாஸ்ட் சீன் இல்லாத அளவுக்கு ஆன் லைன்லயே இருக்கணும்.

மந்திரக் கோல் - உங்கள் புது டிவி ரிமோட்..!

இப்படி, பேசுறதுக்கு மட்டும் கண்டுபிடிக்கபட்ட போன்ல இப்போ பேசுற வேலையத் தவிர மற்ற எல்லா வேலைகளும் சூப்பரா நடந்துட்டு இருக்கு. அந்த அளவு மற்ற வேலைகளை செய்ய விடாமல் மொபைல் போன்கள் நம்மை ஆட்டி படைக்கின்றது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கத்தான் ஆரம்பித்த இடத்திற்கே சென்று, போன் ஆனது பேசுவதற்கு மட்டும்தான் என்று கிளம்பி வந்திருக்கிறது - கிரெடிட் கார்ட் சைஸ் இருக்கும் லைட் போன்..!

லைட் போன் - இதுல போன் மட்டும்தான் பேசலாம்..!

இதில் ஸ்க்ரீன் கிடையாது, இன்டர்நெட் கிடையாது, ஆப்ஸ்கள் கிடையாது, டெக்ஸ்ட் டைப் செய்யவும் முடியாது, போன் பண்ணலாம், வரும் அழைப்புகளை எடுத்து பேசலாம். அவ்ளோதான். பயன்படுத்த படாத போது ஒரு கிரெடிட் கார்ட் போலதான் காட்சியளிக்கும் இது பயன்படுத்தும் போது அதனுள் இருக்கும் எல்இடி லைட் ஆன் ஆகி தொழில் நுட்பநவீனத்தின் உச்சத்தை நமக்கு காட்டும்.

கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 10 சூப்பர் ஐடியாக்கள்..!

20 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் வரை அமைக்கப்பட்டுள்ள இதில் 10 ஸ்பீட் டயல் நம்பர்களும், பில்ட்-இன் கடிகாரமும் உள்ளடக்கம். தயாரிப்பில் உள்ள இந்த லைட் போன்களை சொந்தமாக்கி கொள்ள பறக்க பறக்க ஒரு பக்கம் முன்பதிவு நடந்து கொண்டிருக்க, 2016-ஆம் ஆண்டு மே மாதம்தான் சந்தைக்கு வருமாம்..!

Best Mobiles in India

English summary
Disconnect from the modern world by using credit card sized cell phone. No apps and no texts – it functions solely as a phone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X