விரைவில் வெளியாக இருக்கும் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2

|

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களில் இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2

சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்.ஐ. மிக்ஸ் 2 இருக்கிறது. அதிகப்படியான ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் எம்.ஐ. மிக்ஸ் 2 சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பணிகளில் முந்தைய எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனினை வடிவமைத்த பிரென்ச் வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் ஈடுபடுவார் என லெய் ஜூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 இறுதி வடிவமைப்பு நிறைவடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. அதன்படி இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் முன்பக்கம் ஆப்பிள் ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கிறது.

பெசல்-லெஸ் வடிவமைப்பு

பெசல்-லெஸ் வடிவமைப்பு

முழுமையான பெசல்-லெஸ் வடிவமைப்பு, ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ள நிலையில், செல்Hி கேமரா, சென்சார் மற்றும் இயர்போன் பொருத்துவதற்கான இடம் காலியாகவே காட்சியளிக்கிறது.இதுதவிர முன்பக்க வடிவைப்புகளில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்

டூயல் கேமரா அமைப்பு

டூயல் கேமரா அமைப்பு

எனினும் போனின் வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோலர்களும், இடது புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் சென்சார்கள் செங்குத்தாகவும், எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

குறிப்பாக இதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை. இதனால் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் கீழ் ஹெட்போன் ஜாக் இடம்பெறவில்லை.

எனினும் புதிய சாதனத்தில் மேல் பகுதியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருந்தாலும் போனின் கீழ் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது.

Source

Best Mobiles in India

Read more about:
English summary
The Xiaomi Mi Mix 2 is said to come with a higher screen-to-body ratio than the original Mi Mix that was announced in the last year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X