பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!

|

பட்ஜெட் விலையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த ஜியோ பிளானிங் நன்மைகளை பற்றி கூறினால்.. "Jio கிட்ட இப்படி ஒரு பிளான் இருக்கா?" என்று உங்களில் சிலர் ஷாக் ஆகலாம்!

ஏனென்றால் நாம் இங்கே பார்க்கக்போகும் ஜியோ பிளான் ஆனது, சிங்கிள் ரீசார்ஜ்ஜில் 14 ஓடிடி சந்தாக்களையும் (OTT Subscriptions), கற்பனை கூட செய்து பார்க்க முடியாத டேட்டா நன்மைகளையும் வழங்குகிறது!

அதென்ன பிளான்? அது என்னென்ன 14 ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது? அதன் விலை என்ன? இந்த திட்டம் வேறு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

இந்த திட்டத்தின் விலை என்ன?

இந்த திட்டத்தின் விலை என்ன?

நாம் இங்கே பேசும் ஜியோ ரீசார்ஜ்ஜின் விலை ரூ.699 ஆகும். இது ஒரு ஜியோஃபைபர் திட்டம் ஆகும். அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு பிராட்பேண்ட் திட்டம் ஆகும்.

ஜியோவின் போஸ்ட்பெய்டு திட்டங்களின் முக்கிய சிறப்பு என்னவென்றால், அவைகள் மிகவும் மலிவான விலையில் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளை வழங்கும். அதிலும் குறிப்பாக நாம் இங்கே பேசும் ஜியோஃபைபர் ரீசார்ஜ் ஆனது - ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 14 ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

ரூ.699 வழியாக 14 OTT சந்தாக்களை பெறுவது எப்படி?

ரூ.699 வழியாக 14 OTT சந்தாக்களை பெறுவது எப்படி?

JioFiber வழங்கும் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் 14 ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களை பெற, நீங்கள் ஒரு சிறிய கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது ரூ.699 என்கிற அடிப்படை கட்டணத்துடன், ரூ.200 என்கிற கூடுதல் கட்டணத்தை செலுத்தினால், ரூ.899 என்கிற மொத்த செலவின் கீழ் டேட்டா நன்மைகளுடன் சேர்த்து 14 ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களும் அணுக கிடைக்கும்!

என்னென்ன ஓடிடி சந்தாக்கள் கிடைக்கும்?

என்னென்ன ஓடிடி சந்தாக்கள் கிடைக்கும்?

இந்த திட்டம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைப் (SonyLIV), ஜீ5 (ZEE5), வூட் செலெக்ட் (Voot Select), வூட் கிட்ஸ் (Voot Kids), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சொய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), யுனிவர்சல் பிளஸ் ( Universal+), ஆல்ட்பாலாஜி (ALTBalaji)), ஈரோஸ் நௌவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரோமீ (ShemarooMe), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோசாவன் (JioSaavn) ஆகியவற்றுக்கான இலவச அணுகலை வழங்கும்!

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

ஓடிடி நன்மைகளை தவிர்த்து வேறு என்னென்ன கிடைக்கும்?

ஓடிடி நன்மைகளை தவிர்த்து வேறு என்னென்ன கிடைக்கும்?

ஓடிடி நன்மைகளை தவிர்த்து இந்த ஜியோ திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 3300 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது 3.3டிபி என்கிற மாதாந்திர டேட்டா நன்மை கிடைக்கும்.

இதுவொரு 100Mbps திட்டம் ஆகும். அதாவது இந்த திட்டம் 100எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் வேகத்தின் கீழ் உங்களுக்கான டேட்டா நன்மைகளை வழங்கும்.

புதிய ஜியோஃபைபர் வாடிக்கையாளர் என்றால் என்ன செய்ய வேண்டும்?

புதிய ஜியோஃபைபர் வாடிக்கையாளர் என்றால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ஒரு புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர் என்றால், JioFiber இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் வழியாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, இந்த திட்டம் 550 க்கும் மேற்பட்ட ஆன்-டிமாண்ட் டிவி சேனல்களுடன் அனுப்பப்படும் மற்றும் JioFiber இலிருந்து இலவச செட்-டாப் பாக்ஸையும் (STB) நீங்கள் கோரலாம்.

கடைசியாக இந்த திட்டம் (புதிய வாடிக்கையாளர்களுக்கு) மூன்று, ஆறு மற்றும் பன்னிரெண்டு மாதங்கள் என்கிற விருப்பங்களின் கேள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Best Mobiles in India

English summary
This Budget Price Jio Plan Gives You 14 OTT Subscriptions and 3300 GB Data In Single Recharge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X