BSNL-ன் ஸ்பெஷல் ரீசார்ஜ்.. இவ்ளோ கம்மி விலைக்கு 90 நாள் வேலிடிட்டி-ஆ.. ஆடிப்போன கஸ்டமர்கள்!
2024 ஆம் ஆண்டில்.. ஜியோ VS ஏர்டெல் VS வோடாபோன் VS பிஎஸ்என்எல் என்கிற போட்டியில் "ஓடாம ரன் எடுத்தோம்.. சும்மாவே உக்காந்து வின் எடுத்தோம்" என்று கூலாக இருந்தது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தான். அதற்கு காரணம் மற்ற மூன்று நிறுவனங்களும், அவைகளின் திடீர் ரீசார்ஜ் விலை உயர்வும் தான்!
மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களும் (ஜியோ, ஏர்டெல், விஐ) தத்தம் ரீசார்ஜ் கட்டண விலைகளை கடுமையாக உயர்த்திய வேகத்தில், கடுப்பான கஸ்டமர்கள் மிகவும் மலிவான விலையில் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இடம்பெயர தொடங்கினர். இதன் விளைவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை குபுகுபுவென மேலே ஏறியது.

இந்த போக்கை 2025 ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது. ஏனென்றால் தற்போது வரையிலாக விலை உயர்வை பற்றி பிஎஸ்என்எல் பேசவே இல்லை. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து மிகவும் மலிவான விலைக்கு லாங் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த பட்டியலில் உள்ள ஒரு ஸ்பெஷல் ரீசார்ஜை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.
அது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் ரூ.439 திட்டமாகும். இது இப்போதைக்கு இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான 3 மாத கால வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். பெரும்பாலான பகுதிகளில் அதிவேக (4ஜி) நெட்வொர்க்குகள் இல்லாததால், பெரும்பாலான நுகர்வோரின் முதல் தேர்வாக பிஎஸ்என்எல் இருப்பதில்லை என்பது உண்மைதான்!
ஆனாலும் கூட பெரும்பாலான பட்ஜெட் வாசிகளின் இறுதி முடிவு - பிஎஸ்என்எல்-ஐ நோக்கித்தான் செல்கிறது. குறிப்பாக தங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும், மிகவும் அடிப்படையான நன்மைகளை மட்டுமே எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-ன் பக்கம் சாய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் ரூ.439 மதிப்புள்ள ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சரின் நன்மைகள் அப்படி!
ரூ.439 ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சரின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.500 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டமானது 90 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் பயனர்களுக்கு வழங்கும் 90 நாட்கள் திட்டங்களுடன்ஒப்பிடும் போது இது மிகவும் மலிவான திட்டமாகும்
பிஎஸ்என்எல்-ன் ரூ.439 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகள் கிடைக்கும். மேலும் செல்லுபடியாகும் 90 நாட்களுக்கும் மொத்தம் 300 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இதுவொரு வாய்ஸ் வவுச்சர் என்பதால் இதன் கீழ் டேட்டா பலன்கள் ஏதுவும் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்கு டேட்டா தேவைப்படும்போதெல்லாம் மலிவு விலையிலான டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்
வாய்ஸ் கால் நன்மைகள் தான உங்களுக்கான முதன்மையான தேவை என்றால் ரூ.439 ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் முழுக்க முழுக்க உங்களுக்கான திட்டமாக இருக்கலாம். பொதுவாக இரண்டாம் நிலை சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் அது ஆக்டிவ் ஆக இருந்தால் பொதும் என்கிற எண்ணத்தையே கொண்டிருப்பர். அப்படிப்பட்ட பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இதுபோன்ற மலிவு விலை திட்டங்களை வைத்தே பிஎஸ்என்எல் நிறுவனமானது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்ள சந்தாதாரர்களை தனக்காக புதிய வயர்லெஸ் வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது. எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனம் பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய பின்னர், இந்நிறுவனத்தின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதிலும், பல எண்ணிக்கையிலான இரண்டாம் நிலை பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் ஆனது ப்ரைமரி சிம் கார்டுகளாக மாறும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். ஆனால் இதெல்லாமே பிஎஸ்என்எல் ஆனது அதன் 4ஜி திட்டங்களின் விலைகளை எப்படி நிர்ணயம் செய்கிறது என்பதை பொறுத்தது!


Click it and Unblock the Notifications








