Home
News

ஜியோ, ஏர்டெல் கொடுக்காத வேலிடிட்டி.. லம்ப்-ஆ 120GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ! என்ன விலை?

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இப்படி ஒரு திட்டமா என்று ஆச்சரிப்படுத்தும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம். அதென்ன திட்டம்? அதன் விலை மற்றும் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

என்ன திட்டம்? எவ்வளவு டேட்டாவை வழங்கும்? அது பிஎஸ்என்எல்-ன் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டமே ஆகும். இது தினசரி டேட்டா பயன்பாட்டு வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட விரும்பாத பிஎஸ்என்எல் பயனர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். ஏனென்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்கள் எஃப்யுபி (FUP) எனப்படும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா வரம்புகளுடன் வருகின்றன.

லம்ப்-ஆ 120GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ!

அதாவது டெய்லி 1ஜிபி அல்லது 2ஜிபி என்கிற டேட்டாவை வழங்கும்; குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் குறைக்கப்பட்ட இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். ஆனால் அதை வைத்து வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்புவது போன்ற மிகவும் எளிதான பணிகளை மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் பிஎஸ்என்எல்-ன் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான டெய்லி லிமிட்டும் இல்லாமல் மொத்தம் 120ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடவே 120ஜிபி டேட்டா தீர்ந்த பின்னரும் கூட 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.

லம்ப்-ஆ 120GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ!

என்ன வேலிடிட்டி? சுவாரசியமாக பிஎஸ்என்எல்-ன் ரூ.398 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல்லும், 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்ட திட்டங்களையே 1 மாத திட்டம் என்று பட்டியலிட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல்-ன் ரூ.398 ஆனது முழுதாக 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது.

அதாவது நீங்கள் 120ஜிபி டேட்டாவை 30 நாட்களுக்கு பொறுமையாக.. கொஞ்சம் கொஞ்சமாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே நாளில் கூட 120ஜிபி டேட்டாவை தீர்த்துவிடலாம். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற வேறு எந்த நன்மையையும் கிடைக்காது.

லம்ப்-ஆ 120GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ!

சுருக்கமாக 120ஜிபி டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்துடன் இணைந்த வேறு எந்த கூடுதல் நன்மைகளும் இல்லை. நீங்கள் பிஎஸ்என்எல் 4ஜி கவரேஜின் கீழ் இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் விலை உயர்ந்த திட்டமும் இதுவே ஆகும்.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், பிஎஸ்என்எல் நிறுவனம் 0.15 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதன் விளைவாக பிஎஸ்என்எல்-ன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 91.77 மில்லியனாக குறைந்துள்ளது.

லம்ப்-ஆ 120GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ!

பிஎஸ்என்எல்-ஐ போலவே வோடபோன் ஐடியாவும் கூட சந்தாதாரர்களை இழந்துள்ளது. இந்நிறுவனம் 1.36 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்கள் வெளியேற முக்கிய காரணம் (முறையே) 4ஜி அறிமுகம் மற்றும் 5ஜி அறிமுகமே ஆகும்!

பிஎஸ்என்எல் நிறுவனம் பரந்த அளவிலான 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவில்லை. ஆங்காங்கே சில வட்டங்களில் மட்டுமே வழங்கி வருகிறது. இது எப்போது பான்-இந்தியா 4ஜி நெட்வொர்க்கை வெளியிடுகிறதோ, அப்போது தான் இந்நிறுவனத்தால் சந்தாதாரர்கள் வெளியேறுவதை தடுக்க முடியும். இதே நிலைமை தான் வோடபோன் ஐடியாவிற்கும், ஆனால் அது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்ய வேண்டும்!

Best Mobiles in India

English summary
This BSNL Prepaid Plan Offers 120GB Data and After FUP Limit 40kbps Unlimited Data For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X