மிரண்டு போன அம்பானி.. BSNL-ன் லைஃப்டைம் செட்டில்மென்ட் பிளான்.. 4000ஜிபி டேட்டா, இலவச OTT, அன்லிமிடெட் வாய்ஸ்!
முழுதாக 4டிபி டேட்டா.. அதாவது 4000ஜிபி டேட்டா, கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மேலும் பிரபலமான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும் ஒரு பிஎஸ்என்எல் (BSNL) திட்டத்தை "லைஃப்டைம் செட்டில்மென்ட்" என்று கூறுவதில் தவறில்லை! அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் "பெஸ்ட் 300எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தை" (Best 300 Mbps Broadband Plan) பற்றித்தான். இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1799 ஆகும். நம்பினால் நம்புங்கள் இது மாதத்திற்கு 4000ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

டெய்லி டேட்டா லிமிட் (Daily Data Limit) அல்லது எஃப்யூபி (FUP) என்று சுருக்கமாக ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) போன்றவற்றை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தடையற்ற இன்டர்நெட் எக்ஸ்பீரியன்ஸை அனுபவிக்க விரும்பும் எவருக்குமே இதுவொரு பெஸ்ட் பிளான் ஆகும்.
கூடவே இது இலவச ஓடிடி (Free OTT) நன்மைகளையும் வழங்குவதால் மூவிஸ் மற்றும் வெப் சீரிஸ் பிரியர்களுக்கும் இதுவொரு அட்டகாசமான தேர்வாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். இந்த திட்டத்தின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரு (ShemarooMe), ஹங்காமா (Hungama), சோனிலைவ் ( SonyLIV), ஜீ5 ( ZEE5) மற்றும் யப்டிவி (YuppTV) ஆகியவைகளுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை ஃபைபர் அல்ட்ரா ஓடிடி (Fibre Ultra OTT) என்று அழைக்கிறது. இந்த திட்டம் 300எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் (Internet Speed) கீழ் 4000ஜிபி அல்லது 4டிபி மாதாந்திர டேட்டாவை வழங்கும். ஒருவேளை நீங்கள் மொத்த டேட்டாவையும் தீர்த்துவிட்டாலும் கூட, உங்களால் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
ஆனால் உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 15எம்பிபிஎஸ் (15Mbps) ஆக குறைக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் இலவச பிக்ஸடு லைப் வாய்ஸ் கல் கனெக்ஷனையும் நீங்கள் பெறுவார்கள். இதன்கீழ் அன் லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை அணுக கிடைக்கும். ஆனால் லேண்ட்லைன் இணைப்புக்கான கருவியை (Landline Connection Tool) பெற நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஆக்டிவ் பிராட்பேண்ட் கனெக்ஷனை பெற்ற உடனேயே மேற்கண்ட எல்லா நன்மைகளும் உங்களுக்கு வந்துசேரும். ஒருவேளை உங்களுக்கு 4000ஜிபி டேட்டா போதாது என்றால்.. நீங்கள் ரூ.2299-ஐ தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1799-ல் உள்ள அனைத்து நன்மைகளும் கிடைக்கும்; ஆனால் 4டிபிக்கு பதிலாக 4.5டிபி (4500ஜிபி) மாதாந்திர டேட்டா கிடைக்கும்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டமான (Entry Level Broadband Plan) ரூ.329-ஐ விரைவில் நீக்கவுள்ளதாக அறிவித்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட திட்டமானது இம்மாத இறுதிக்குள், அதாவது ஜூலை 30 ஆம் தேதிக்குள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து அகற்றப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








