Home
News

பரவசத்தில் BSNL பயனர்கள்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 1000GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. இலவச ஹாட்ஸ்டார்-ஆ!

பரவலான முறையில் 4ஜி சேவைகள் (4G Services) அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, மிகவும் பிரபலமான பான்-இந்தியா அடிப்படையிலான இணைய சேவை வழங்குநர்களில் (PAN-India Internet Service Providers) ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை (Fiber broadband services) வழங்குவதற்கு முன்னதாக இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு டிஎஸ்எல் கனெக்ஷன்களை (DSL Connection) வழங்கியது. இது, இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் ஒரு மிகப்பெரிய இன்டர்நெட் சீவீஸ் ப்ரோவைடராக உருமாற உதவியது.

பரவசத்தில் BSNL பயனர்கள்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 1000GB டேட்டாவா!

பின்னர் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட, ஃபிக்ஸடு பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான (Fixed broadband connections) சந்தைப் பங்கின் அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனமானது இன்னுமும் முதல் 3 இடங்களில் தான் உள்ளது. அதற்கு காரணம் இந்நிறுவனம் வழங்கும் சில அட்டகாசமான திட்டங்கள் தான்!

அப்படியாக 100எம்பிபிஎஸ் ஸ்பீட், 1000ஜிபி அதாவது 1டிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல் போன்ற நன்மைகளை, மிகவும் மலிவான விலைக்கு வழங்கும் ஒரு பிஎஸ்என்எல் திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம்.

அது ரூ.799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் பைஃபர் வேல்யூ ஓடிடி (Fibre Value OTT) திட்டமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் பல வகையான 100எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன. அவைகளில் ஓடிடி நன்மைகளுடன் தொகுக்கப்பட்ட ஒரே ஒரு திட்டமென்றால் அது ரூ.799 தான்.

பிஎஸ்என்எல்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (BSNL Official Website) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டமானது 100எம்பிபிஎஸ் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்துடன் (Download and Upload Speed) வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 1000ஜிபி அல்லது 1டிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.

மற்ற நன்மைகளை பொறுத்தவரை, ரூ.799 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் இலவச ஃபிக்ஸடு லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனும் கிடைக்கும். லேண்ட்லைன் கனெக்ஷனிற்கான சாதனமானது தனியாக பணம் கொடுத்து வாங்கப்பட்ட வேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த திட்டத்தின் மிக முக்கியமான பகுதி, அதாவது ரூ.799-ன் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகளை பற்றி பார்க்கும் போது, இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் யப் டிவி (Yupp TV) போன்ற தளங்களுக்கான அணுகல்களை வழங்குகிறது.

ஒருவேளை ரூ.799-ன் கீழ் கிடைக்கும் 1000ஜிபி டேட்டா நன்மையானது உங்களுக்கு பற்றவில்லை என்றால், மாறாக சற்றே கூடுதலான டேட்டா தேவை இருந்தால், 100எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும் மற்றொரு திட்டமான ரூ.849-ஐ ரீசார்ஜ் செய்யலாம். மேற்கண்ட 2 திட்டங்களின் விழிகளிலும் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
This BSNL Plan Offers 100 Mbps Speed 1000GB Data Unlimited Voice Free Hotstar ZEE5 For Just Rs 799
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X