அன்லிமிடெட்-னா இப்படி இருக்கணும்.. கம்மி விலையில் 65 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகளை வழங்கும் BSNL திட்டம்!
அன்லிமிடெட் (Unlimited) நன்மைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு, ஒரே ஒரு ரீசார்ஜில் மொத்தம் 65 நாட்களுக்கு ஓஹோவென நன்மைகளை வழங்கும் ஒரு பட்ஜெட் விலை பிஎஸ்என்எல் (BSNL) ப்ரீபெயிட் திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.
அது பிஎஸ்என்எல்-ன் ரூ.319 திட்டமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் உள்ளன. அவைகளில் அன்லிமிடெட் (வரம்பற்ற) நன்மைகளை வழங்கும் திட்டங்களும் அடங்கும்.

நேஷனல் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
பிஎஸ்என்எல்-ன் அன்லிமிட்ட் தொகுப்பில் ரூ.319 மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும். ஏனென்றால் எல்லா வாடிக்கையாளர்களுக்குமே அதிக அளவிலான டேட்டாவோ அல்லது இலவச நன்மைகளோ தேவைப்படுவது இல்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லோருக்குமே நேஷனல் ரோமிங் (National Roaming) உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மை தேவைப்படுகிறது.
அப்படியான அன்லிமிட்ட் வாய்ஸ் கால் நன்மையை, மொத்தம் 65 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வழங்கும் ஒரு பட்ஜெட் விலை திட்டம் தான் இந்த ரூ.319 ரீசார்ஜ். முன்னரே குறிப்பிட்டபடி, இது நேஷனல் ரோமிங் உடனான அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும். இதில் டெல்லி மற்றும் மும்பையின் எம்டிஎன்எல் (MTNL) ரோமிங் பகுதிகளும் அடங்கும்.
டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் உண்டு!
பிஎஸ்என்எல் ரூ.319-ஐ அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மட்டுமே வழங்கும் ஒரு திட்டமென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 10ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும்.
தினமும் ரூ.5 செலவில் இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?
இந்த திட்டத்தின் விலை (ரூ.319) மற்றும் வேலிடிட்டி (65 நாட்கள்) ஆகிய இரண்டையும் கணக்கிட்டு பார்த்தால், ரூ.319 திட்டமானது ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 அல்லது ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.150 என்கிற செலவின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் சேர்த்து டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.
சைக்கிள் கேப்பில் நடக்கும் மறைமுகமான விலை உயர்வு
பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் திட்டங்களெல்லாம் (BSNL Best Plans) ஒருபக்கம் இருக்க, இந்நிறுவனம் மறைமுகமான விலை உயர்வையும் செய்து வருகிறது. ஒரு திட்டத்தின் விலையை அதிகரித்தால் மட்டுமே அது விலை உயர்வாகி விடாது; அந்த திட்டத்தின் விலையை மாற்றாமல் அதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை குறைத்தாலும் கூட விலை உயர்வு தான்!
அப்படியாக சமீபத்தில், பிஎஸ்என்எல்-ன் மிகவும் பிரபலமான நைட் அன்லிமிடெட் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டா நன்மை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டாவை வழங்கிய இந்த திட்டம் தற்போது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ரூ.599 திட்டத்தின் மற்ற நன்மைகள் எதுவும் மாறாமல் அப்படியே உள்ளது!


Click it and Unblock the Notifications








