சைக்கிள் மிதித்தால் மின்சாரம் தயாரிக்கலாம்..!!

Written By:

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் அத்தியாவசிய தேவாயாக தற்சமயம் இருப்பவைகளில் மின்சாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம். இன்றைய தேதியில் மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்றிருக்கும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை இருக்கத்தான் செய்கின்றது.

சைக்கிள் மிதித்தால் மின்சாரம் தயாரிக்கலாம்..!!

குறிப்பாக தமிழகத்தில் இப்பிரச்சனை அதிகம் என்றும் கூறலாம். நம் நாட்டில் மின்சார பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக வீட்டிலேயே மின்சாரம் தயாரிக்கும் எளிய கருவியை இந்திய வம்சாவெளியை சேர்ந்த மனோஜ் பார்கவா அறிமுகம் செய்திருக்கின்றார்.

எளிமையான மிதிவண்டி போன்ற கருவியை கொண்டு மூலம் மின்சாரம் தயாரிப்பதோடு அந்த மின்சாரத்தை அன்றாட வீட்டு பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மிதிவண்டி மின்சாரம் தயாரிப்பதோடு இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் மிதிவண்டியில் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரியில் சேமிக்கப்படுகின்றது.

சைக்கிள் மிதித்தால் மின்சாரம் தயாரிக்கலாம்..!!

இந்தியாவில் இந்த மிதிவண்டியின் விலை ரூ.12,000 - ரூ.15,000 வரை இருக்கலாம் என்றும் இந்த மிதிவண்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரலாம் என்றும் பார்கவா தெரிவித்துள்ளார். நாள் ஒன்றைக்கு 60 நிமிடங்கள் மிதித்தால் 24 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் மின்விளக்குகள், மின் விசிறி, மொபைல் போன் சார்ஜ் போன்றவைகளை மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த கருவி தயாரிக்கப்படுகின்றது. உத்தராகண்டம் மாநிலத்தில் முதலில் விற்பனைக்கு வரும் இந்த மிதிவண்டி அதன் பின் மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டியில் பயனாளிகள் எத்தனை கலோரிகள் எரித்திருக்கின்றனர் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் அம்சமும் வழங்கப்படுகின்றது. முக்கியமாக இந்த கருவியானது உலகெங்கும் மின்சாரம் இல்லாமல் வாழும் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு அதிக உதவியாக இருக்கும் என பார்கவா தெரிவித்தார்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

Read more about:
English summary
This bicycle can produce electricity for your home within an hour. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot