Home
News

அள்ளுது ஆர்டர்.. முழுசா ரூ.5500 விலை குறைப்பு.. 120Hz டிஸ்பிளே.. 5,000mAh பேட்டரி, 50MP AI கேமரா.. என்ன மாடல்?

120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.71-இன்ச் எச்டி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமரா உட்பட விலையை மீறிய பல அம்சங்களை கொண்ட.. ஒரு பட்ஜெட்-விலை ரெட்மி போனானது தற்போது ரூ.5500 என்கிற விலைகுறைப்பை பெற்று சூப்பர்-பட்ஜெட் போனாக உருமாறியுள்ளது.

நாம் இங்கே பேசுவது ரெட்மி 12சி (Redmi 12C) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் 39% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது; அதாவது முழுதாக ரூ.5500 என்கிற விலைக்குறைப்பின் கீழ் வாங்க கிடைகிறது. இதன் பழைய விலை என்ன? புதிய சலுகை விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனில் நிறைகள் மற்றும் குறைகள் (Pros and Cons) என்னென்ன? இதோ விவரங்கள்:

Redmi 12C: அள்ளுது ஆர்டர்.. முழுசா ரூ.5500 விலை குறைப்பு!

ரெட்மி 12சி அசல் விலை மற்றும் ஆஃபர் விலை: ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் அசல் விலை (Original Price) ரூ.13999 ஆகும். இருப்பினும் இது அமேசான் வழியாக மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. 39% என்கிற நேரடி தள்ளுபடிக்கு பிறகு இது வெறும் ரூ.8499க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் மீது "நம்ப முடியாத" எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் (Exchange Offer) கிடைக்கிறது.

அமேசான் வலைத்தளமானது, ரெட்மி 12சி மீது ரூ.8050 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. உங்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் வேல்யூவானது (Exchange Value) நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய போனின் மாடல் மற்றும் தற்போதயை நிலையைப் பொறுத்தது. உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ்ச் சலுகை அணுக கிடைக்கிறதா என்பதை உங்களுடைய பின் கோட்-ஐ (PIN Code) அமேசானில் உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கவும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஆனது 6.71 இன்ச் அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD Display) கொண்டுள்ளது. இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸை (Peak Brightness) கொண்டுள்ளது. கூடவே இதன் டிஸ்பிளேவானது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) மற்றும் 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz Touch Sampling Rate) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

சுவாரசியமாக இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது கீறல்-எதிர்ப்பு கிளாஸ் (Scratch-resistant Glass) மற்றும் ஓலியோபோபிக் கோட்டிங்கையும் (Oleophobic Coating) கொண்டுள்ளது. ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் (MediaTek Helio G85 Processor) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான எம்இயுஐ 13 (MIUI 13) மூலம் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி ஏஐ மெயின் கேமரா (50MP AI Main Camera) உள்ளது. இது போர்ட்ரெய்ட் மோட் மற்றும் நைட் மோட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, 10W இன்-பாக்ஸ் சார்ஜர், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உடன் 5,000mAh பேட்டரி உள்ளது.

ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் நிறைகளை (Redmi 12C Pros) பொறுத்தவரை, இதில் பெரிய 5000mAh பேட்டரி உள்ளது; பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்; பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது; இது பல வகையான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது; விலை வரம்பிற்கு ஏற்ற சிப்செட் / செயல்திறனை கொண்டுள்ளது.

ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் குறைகளை (Redmi 12C Cons) பொறுத்தவரை, இதன் டிஸ்பிளே மிகவும் குறைவான 720பி ரெசல்யூஷனை கொண்டுள்ளது; இதன் கேமராக்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை; இதில் மைக்ரோ யூஎஸ்பி 2.0 சார்ஜிங் போர்ட்டை கொண்டுள்ளது; ஹெவி கேமிங்கில் ஹீட்டிங் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம்; இதில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இல்லை; போதுமான ஃபாஸ்ட் சார்ஜிங்கும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Best Budget Phone From Redmi Gets Big discount on Amazon Check Redmi 12C Offer Price Pros Cons
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X