'மோசமான' ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு வைக்க போகும் ஆப்..!
ஆட்டோக்கள், ஆட்டோ டிரைவர்கள் என்றாலே சிலர்க்கு அலர்ஜி ஆகிவிடும் அந்த அளவிற்கு சிலர் - முக்கியமாக பெண்கள் - ஆட்டோ டிரைவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை..!

நல்ல நேர்மையான ஆட்டோ டிரைவர்களுக்கு மத்தியில் தொல்லையான மற்றும் மோசமான ஆட்டோ டிரைவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து ஒடுக்க தான் உருவாகி கொண்டிருக்கிறது இன்னும் பெயரிடப்படாத ஒரு ஸ்மார்ட்போன் ஆப். இந்த ஆப்பை உருவாக்குவதில் காவல்துறையும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது மற்றும் ஒத்துழைப்பை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்பின் முக்கியமான சிறப்பம்சம் - டிஜிட்டல் மீட்டர், அதாவது இந்த டிஜிட்டல் மீட்டர் ஆனது நீங்கள் பயணித்த தூரத்தை கணக்கு போட்டு எவ்வளவு தொகை என்பதை சொல்லி விடும், அதைவிட மிக அதிகமாக ஏதேனும் ஆட்டோ டிரைவர்கள் பணம் கேட்டால் ஆப்பின் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் டிராபிக் போலீஸ் அங்கு விரையும்படி இந்த ஆப் உருவாக்கப்படுகிறதாம்.

அதிக அளவிலான ஆட்டோ கட்டணம் சார்ந்த புகார் மட்டுமின்றி பெண்களுக்கு ஏதேனும் தொந்தரவுகளை ஆட்டோ டிரைவர்கள் செய்தாலும் உடனடியாக இந்த ஆப் மூலம் புகார் அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!


Click it and Unblock the Notifications
