நிம்மதியாக தூங்க இந்த 'செயலி' போதும்..!
மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத இரு விஷயங்கள் உணவு மற்றும் உறக்கம் தான். சத்தான உணவு மற்றும் சரியான தூக்கம் மனிதனை நோயின்றி வாழ வழி வகுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என பழமொழியை இன்று பின்பற்றுவது மிகவும் சிரமமான காரியமாகி விட்டது.

கலியுகத்தில் மனிதன் தன் வேலைகளை சுலபமாக்கும் கையடக்க கருவிகளுக்கு அடிமையாகி வரும் நிலையில் யாரும் தங்களது உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் செயலி தான் 'ஸ்லீப் பீஸ்ஃபுல்லி' (Sleep Peacefully).

சந்தையில் புதிதாக வெளியாகியிருக்கும் இந்த செயலி இரவு நேரங்களில் பயனாளிகளின் மொபைல் போனினை சைலன்ட் மோடில் வைத்து விடும். இதை தொடர்ந்து பயனர்களுக்கு அழைப்புகள் வந்தால் அழைப்பவருக்கு குறிப்பிட்ட மொபைலில் இருந்து மொபைல் சைலன்ட் மோடில் இருப்பதை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும்.

இது போன்ற நேரங்களில் ஏதேனும் அவசரம் என்றால் அழைப்புகளை மேற்கொள்பவர் பதிலுக்கு 'URGENT' என குறிப்பிட்ட குறுந்தகவலை அனுப்பினால் உடனடியாக இந்த செயலி எச்சரிக்கை செய்யும். இதோடு இல்லாமல் அதிகாலையில் அலாரம் போன்று சரியான நேரத்தில் பயனர்களை சத்தம் மூலம் எழுப்பவும் செய்யும். இந்த செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications