இந்த ஆப் இருந்தால் இந்தியா முழுக்க 19 பைசா மட்டுமே..!!
விலை குறைவு, மக்களை கவர மிகச்சிறந்த வழி என்பதை அனைவரும் அறிந்திருப்பதன் விளைவு தான் இது போன்ற செயலிகளின் வரவுக்கு முக்கிய காரணம். மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அழைப்புகளை இந்தியா முழுவதும் வழங்கும் புதிய செயலி குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ரிங்கோ
இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளையும் நிமிடத்திற்கு 19 பைசாவில் மேற்கொள்ள உதவும் புதிய செயலி தான் ரிங்கோ.

குறைவு
இந்தியாவிலேயே குறைந்த விலையில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்யும் இந்த செயலி மற்ற நிறுவனங்களை விட மாறுப்பட்ட சேவையை வழங்குகின்றதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்டிடி
சாதாரண நிறுவனங்கள் எஸ்டிடி அதாவது மற்ற மாநிலங்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு தனி கட்டணம் வசூலித்து வரும் நிலையில் இந்நிறுவனம் இந்தியா முழுவதிலும் ஒரே கட்டணத்தையே நிர்ணயம் செய்திருக்கின்றது.

குறைவு
இந்தியா முழுவதும் 19 பைசாவில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்யும் ரிங்கோ நிறுவனத்தின் கட்டணம் மற்ற நிறுவனஙகளை விட 90 சதவீதம் வரை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்முதல்
மற்ற நிறுவனங்களிடம் இருந்து அதிக அழைப்புகளுக்கான நிமிடங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதன் பின் அவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக ரிங்கோ தெரிவித்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பம்
மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கான்ஃபரென்ஸ் ப்ரிட்ஜ் மூலம் அழைப்புகள் இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அழைப்புகள்
ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் சர்வதேச அழைப்புகளை துவங்கிய நிலையில் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிதிவிறக்கம்
இந்த செயலியை வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications