Home
News

கேபிள் டிவி கட்.. இறங்கி அடிச்ச Airtel.. மாசம் ரூ.299 க்கு 365 நாள் வேலிடிட்டி.. 730GB டேட்டா, இலவச OTT, 5G!

வழக்கமாக போஸ்ட்பெய்ட் சேவைக்குள் செல்லும் பயனர்கள் தான் தத்தம் வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்வார்கள். ஆனால் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் திட்டமே உங்களை அப்படி செய்ய வைக்கும் அளவிலான நன்மைகளை வழங்குகிறது; அதுவும் 1 ஆண்டுக்கு! அதென்ன திட்டம்? இதோ விவரங்கள்:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் மொத்தம் 730ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கும் ஒரு தரமான பிளானை கொண்டுள்ளது. சுவாரசியமாக இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் இலவச ஓடிடி (OTT) சந்தாக்களையும் வழங்குகிறது.

கேபிள் டிவி கட்.. இறங்கி அடிச்ச Airtel.. மாசம் ரூ.299 க்கு 365 நாள்!

நாம் இங்கே பேசுவது பார்தி ஏர்டெல்லின் ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். இது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் - இரண்டாவது மிக விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டம் - அதிவேக நெட்வொர்க்குகளுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும், ஹெவி மொபைல் டேட்டா நுகர்வோர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 730ஜிபி மொத்த டேட்டாவானது டெய்லி 2ஜிபி ஆக கிடைக்கும். கூடவே இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

பயனர்கள் தங்களுடைய ஏர்டெல் மொபைல் நம்பர் மூலம் லாக் -இன் செய்வதன் மூலம் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக வரம்பற்ற 5ஜி சலுகையையும் பெறலாம். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சன் நெக்ஸ்ட், சோனி லைவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை பெறலாம்

ஒருவேளை நீங்கள் பார்தி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவையின் கீழ் மிகவும் மலிவான திட்டத்தை தேடினால்.. இந்த பிரிவில் மிகவும் மலிவான திட்டமென்றால் அது ரூ.599 மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் (Airtel Xstream Fiber Broadband Plan) தான்.

ஏர்டெல் ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. இதன் கீழ் உங்களுக்கு 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) உட்பட 20 க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களுடன் வருகிறது.

டிவி நன்மைகளை பொறுத்தவரை ரூ.599 திட்டமானது 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (இதில் எச்டி சேனலக்ளும் அடக்கம்) வழங்குகிறது. இந்த திட்டத்தை 3 மாத திட்டமாக (3 Months Plan) அதாவது காலாண்டு திட்டமாக (Quaterly Plan) நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation) போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

இதற்கு அடுத்ததாக உள்ள ஏர்டெல் ரூ.699 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது 40 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இதுவும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடிகளுடன் வருகிறது. ரூ.599 திட்டத்தை போலவே ரூ.699 திடமானதும் 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (இதில் எச்டி சேனலக்ளும் அடக்கம்) வழங்குகிறது.

இதற்கும் அடுத்ததாக ஏர்டெல் ரூ.899 பிராட்பேண்ட் திட்டம் உள்ளது. இது 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வரும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாகும். இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் கிடைக்கும், 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
This Airtel Prepaid Plan Offers 730GB Data Along With Unlimited 5G and OTT Benefits For 365 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X