என்னடா இப்படி இறங்கிடீங்க? 365 நாட்களுக்கும் FREE.. தினமும் OTT பார்ப்பவர்களுக்கு ஏற்ற Airtel ரீசார்ஜ்!
நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளராக இருந்தால், கூடவே ஒரு மூவி லவ்வராக இருந்தால்.. அதாவது ஒரு திரைப்படத்தையோ அல்லது வெப் சீரிஸின் ஒரு எபிசோடையோ பார்க்காமல் உங்களுடைய ஒரு நாள் இனிதே முடிவடையாது என்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
ஏனென்றால் 365 நாட்களுக்கும்.. பிரபலமான ஓடிடி சேவைகளுக்கான இலவச சந்தாக்களை வழங்கும் ஒரு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன ஓடிடி சந்தாக்கள் இலவசமாக கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு இலவச நன்மைகள்!
நாம் இங்கே பேசுவது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ஏர்டெல்லின் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். ஏர்டெல் நிறுவனத்தின் கீழ், இலவச ஓடிடி நன்மைகளை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் இருந்தாலும் கூட ரூ.3359 ரீசார்ஜ், மிகவும் தனித்துவமான ஒரு திட்டமாக இருக்க 2 முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் - இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பல வகையான ஓடிடி சந்தாக்கள், இலவசமாக அணுக கிடைக்கும். இரண்டாவது காரணம் - இந்த திட்டம், உங்கள் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஏராளமான டேட்டா நன்மையையும் வழங்குகிறது!
Airtel ரூ.3359 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
முன்னரே குறிப்பிட்டபடி ஏர்டெல்லின் ரூ.3359 திட்டமானது 1 ஆண்டுக்கு அல்லது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். டேட்டா நன்மைகளை பொறுத்தவரை இது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும்.
பொதுவாக, மொபைல் போன் வழியாக ஓடிடி தளங்களை அணுகும் பயனர்களுக்கு 2ஜிபி டெய்லி டேட்டாவே போதுமானதாக இருக்கும். ஆக இந்த திட்டம் ஒரு வருடம் முழுவதுமாக டேட்டா தேவைகளை பற்றிய எந்த கவலையையும் உங்களுக்கு வழங்காது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
டேட்டா நன்மைகளோடு சேர்த்து, இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் (SMS) கிடைக்கும்!
Airtel ரூ.3359 ரீசார்ஜ்ஜின் கீழ் என்னென்ன இலவச OTT சந்தாக்கள் கிடைக்கும்?
ஓடிடி நன்மைகள் என்று வரும் போது ஏர்டெல்லின் ரூ.3359 திட்டத்தை தொழில்துறையின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் என்றே கூறலாம்.
ஏனென்றால், இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) மற்றும் ஒரு வருடத்திற்க்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney Plus Hotstar Mobile) ஆகிய இரண்டுமே அணுக கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டம் அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோட்யூன்ஸ் மற்றும் வின்க் ம்யூசிக் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.
இந்த திட்டம் Airtel 5G சேவையின் கீழ் செல்லுபடியாகுமா?
கண்டிப்பாக! ஏர்டெல்லின் ரூ.3359 திட்டமானது நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க்கின் கீழும் வேலை செய்யும். ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை பயன்படுத்துவதற்காக அதன் 4ஜி வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆக நீங்கள், ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை பெறும் தகுதியை பெற்று இருந்தால் மற்றும் உங்களிடம் ஏர்டெல்லின் 5ஜி என்எஸ்ஏ-வை ஆதரிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ரூ.3359-ஐ ரீசார்ஜ் செய்து அதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை 5ஜி நெட்வொர்க்கின் கீழ் அனுபவிக்கலாம்!


Click it and Unblock the Notifications