செயற்கை நுண்ணறிவில் புதிய உச்சம். மனித மூளை சமிக்ஞைகளை மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம்:

By Gizbot Bureau
|

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), சில வருடங்களுக்கு முன்பு வரை முடியாது என்று நினைத்த விஷயங்களை முடித்து வைத்துள்ளது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கையிலெடுத்த பிறகு செயற்கை நுண்ணறிவு புதிய உச்சத்தை தொட்டது. உதாரணமாக பேசுவதை நேரடியாக எழுத்தாக மாற்றும் (Transcription) தொழில்நுட்பம் கிட்டத்தட்ட 99 சதவீதம் பிழையின்றி வர ஆரம்பித்து விட்டது.

சின்ன பசங்க விளையாட்டு

ஆனால் இந்த வளர்ச்சி சின்ன பசங்க விளையாட்டு என்று கூறுவது போல் புதிய தொழில்நுட்பம் ஒன்று தயாராகி கொண்டிருக்கிறது. மனித மூளை சமிக்ஞைகளை (brain activity) மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம்தான் அது.

தொடங்கிய இந்த

நம்பமுடியவில்லை என்றாலும் இது நிஜம்தான். விலங்குகளிடமிருந்து தொடங்கிய இந்த பரிசோதனை மனிதர்கள் வரை இப்போது வளர்ந்து இருக்கிறது. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இதில் வெற்றி கிடைத்திருப்பதாக கலிஃபோர்னியா-சான் பிரான்சிஸ்கோ யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் எட்வர்ட் சாங் குழுவினர் கூறுகின்றனர்.

சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!சானிட்டைஸர்ல ஒரு டுவிஸ்ட் இருக்கு: வைரல் வீடியோ., CM Palaniswamy கொடுத்த ரியாக்‌ஷன்!

டீகோடிங் கில்

இதை மேம்படுத்த எலெக்ட்ரோகார்டிகோக்ராம் (electrocarticogram) டீகோடிங் கில் புதிய உத்தியை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். எலெக்ட்ரோகார்டிகோக்ராம் என்பது மூளையில் மின்முனைகளை பொருத்தி செரிபெல்லத்தின் (சிறு மூளை) மின் அதிர்வுகளை டீகோட் செய்யும் முறை

சாங் குழுவினர்

சாங் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கால்-கை வலிப்பு நோயாளிகள் நான்கு பேர் தங்கள் மருத்துவ நிலையால் ஏற்படும் வலிப்புத்தாக்கங்களை கண்காணிக்க மின்முனைகளை பொருத்தியிருந்தனர். இவர்கள் சில குறிப்பிட்ட வாக்கியங்களை சத்தமாக மீண்டும் மீண்டும் படிக்க வைக்கப்பட்டனர். அதே நேரத்தில் மின்முனைகள் அவர்களின் மூளை செயல்பாட்டை பதிவு செய்தன.

தகவல்கள் (அதிர்வுகள்)

இந்த பதிவு செய்யப்பட்ட தகவல்கள் (அதிர்வுகள்) ஒரு நரம்பியல் தகவல் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டது. இந்த தொகுப்பில் ஏற்கனவே சில உயிரெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை உச்சரிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள், வாயசைவுகள் மூலம் ஏற்படும் அதிர்வுகளின் பேட்டர்ன் எவ்வாறு உள்ளது என்பதை பதிவு செய்து வைத்திருந்தனர். பின்னர் இந்த பதிவுகள் வேறொரு தகவல் தொகுப்பு மூலமாக டீகோடிங் செய்யப்பட்டது.இந்த தகவல் தொகுப்பு 30 முதல் 50 வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசச்செய்து அதன் அதிர்வுகளை பதிவு செய்து வைத்திருந்தது. இதன் மூலமாக வலிப்பு நோயாளிகள் மூலம் பேசப்பட்ட வார்த்தைகளை கணித்து எழுத்தில் பதிவு செய்ய முயன்றனர்.

விதமாக 3 சதவீத தவறு

ஆச்சிர்யம் அளிக்கும் விதமாக 3 சதவீத தவறு மட்டுமே நேர்ந்து கிட்டத்தட்ட மைண்ட் ரீடிங் செய்யப்பட்டது போல 97 சதவீத வார்த்தைகள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

ஆய்வறிக்கையில்

UCSF குழுவினரின் ஆய்வறிக்கையில் பல்வேறு மாதிரிகள் தரப்பட்டிருந்தது. தவறாக டீகோட் செய்யப்பட்ட சில வார்த்தைகள் சில முற்றிலுமாக வேறு வார்த்தைகளாக இருந்தன. மிக குறைவான தகவல் மாதிரிகள் உபயோகப்பட்டதே இதற்கு காரணம்.


ப்ரொபெஷனல் ட்ரான்ஸ்க்ரைபர்கள் கிட்டத்தட்ட உச்சரிப்பை கொண்டு 10,000 வார்த்தைகளை பொருத்தி பார்க்கும் சூழலில் வெறும் 250 வார்த்தைகளில் பொருத்தி பார்க்கும் நிலையிலேயே இந்த அளவு முன்னேற்றம் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தவறாக டீகோட் செய்யப்பட்ட சில வார்த்தைகள் உச்சரிப்பிலோ அர்த்தத்திலோ கொஞ்சம் கூட தொடர்பில்லாதவையாக இருந்தன. என்றாலும் பேச்சை எழுத்துக்களாக மாற்றும் ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன் முறையில் கூட 5 சதவீத தவறு இன்று வரை நேரும் நிலையில் ஆரம்ப கட்ட நிலையிலேயே பிரெயின்-மெஷின் இன்டர்பேஸ் முயற்சியில் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிக பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இழந்தவர்களுக்கு இது பிற்

பேசும் திறனை இழந்தவர்களுக்கு இது பிற்காலத்தில் பெரும் வரமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. இது குறித்த தகவல்களை நேச்சர் நியூரோசயின்ஸ் (Nature Neuroscience) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
This AI System Can Translate Human Brain Signals Into Text Without Any Mistakes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X